உங்களின் புருவங்களின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ளலாம்..!

Advertisement

Eyebrow Personality Test in Tamil

வணக்கம் நண்பர்களே..! நமது உடல் அமைப்பை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இன்று புருவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள முடியும். ஆகவே கீழுள்ள புகைப்படங்களில் 6 வகையான புருவங்கள் உள்ளன. அதில் உங்களுடைய புருவம் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதை பார்த்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ பற்களின் வடிவத்தை வைத்து உங்கள் குணத்தை தெரிந்துகொள்ளலாம்.!

அடர்த்தியான புருவங்கள்:

அடர்த்தியான புருவங்கள்

அடர்த்தியான புருவங்களை உடையவர்கள் எதை நினைத்தும் கவலை பட மாட்டார்கள். இவர்களிடம் ரசிக்கும் உணர்வு அதிகமாக இருக்கும். இவர்களுடன் பழகுபவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை இவர்கள் குணத்திற்கு ஏற்றது போல் மாற சொல்ல மாட்டார்கள். நினைத்த காரியம் நடக்காவிட்டால் கவலை அடைவார்கள். இவர்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றெல்லாம் சிந்திக்காமல் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.

மெல்லிய புருவங்கள்:

மெல்லிய புருவங்கள்

நீங்கள் மெல்லிய புருவங்களை உடையவர்களாக இருந்தால் ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு தடுமாறுவார்கள். முடிவெடுப்பதற்கு மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். எந்த விஷயத்தையும் அதிகமாக சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். உங்களிடம் தன்னம்பிக்கை உணர்வு குறைவாகவே காணப்படும். எந்த செயலையும் தன்னம்பிக்கை இல்லாமல் தொடங்குவீர்கள்.

நேரான புருவம்:

நேரான புருவம்

நேரான புருவங்களை உடையவர்களாக இருந்தால் நேர்மையாக இருப்பீர்கள். எந்த செயலை செய்தாலும் கவனமாகவும், முழு விருப்பதோடும் செய்வீர்கள். அதிகமாக யோசனை செய்யும் குணம் உள்ளவராக இருப்பீர்கள். உங்களிடம் பிடிவாதம் குணம் அதிகமாக இருக்கும். வேலையில் உள்ள டென்ஷனை வீட்டில் வெளிப்படுத்த மாட்டீர்கள். வீட்டில் உள்ள டென்ஷனை வேலையில் காமிக்க மாட்டீர்கள். இரண்டையும் தனித்தனியாக பிரித்து கொள்வீர்கள்.

வளைந்த புருவங்கள்:

வளைந்த புருவங்கள்

நீங்கள் செய்யும் செயல்களை கண்டு மற்றவர்களை ஈர்த்து விடுவீர்கள். நீங்கள் இலட்சியத்தை அடைவதற்கு எந்த எல்லைக்கும் செல்வீர்கள். அனைவரும் உங்கள் பார்க்க வேண்டும் என்று நினைப்பீர்கள். மற்றவர்க்ளுடன் எளிதாக பேச மாட்டீர்கள். மற்றவர்களிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவிடுவீர்கள்.

சேர்ந்த புருவங்கள்:

சேர்ந்த புருவங்கள்

நீங்கள் செய்யும் செயல்களை கண்டு மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலை பட மாட்டீர்கள். இயல்பாகவே உங்களிடம் கற்பனை திறன் மிகுந்து காணப்படும். பிறரை மன்னிக்கிற குணம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை மற்றவர்கள் செய்தால் நீங்கள் கோபம் அடைவீர்கள். உங்களின் குணங்களை யாருக்காகவும் மாற்றி கொள்ள மாட்டீர்கள்.

இடைவெளி உள்ள புருவங்கள்:

இடைவெளி உள்ள புருவங்கள்

நீங்கள் மற்றவர்கள் மீது அன்பாகவும், அக்கறையாகவும் இருப்பீர்கள். மற்றவர்களின் செயல்களை நன்றாக கவனிப்பீர்கள். நீங்கள் மற்றவர்களிடம் பேசு போது மறைமுகமாக எந்த செய்தியையும் சொல்ல மாட்டிர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேச கூடியவர்களாக இருப்பீர்கள். எதிர்காலத்தை நினைத்து வருந்த மாட்டீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement