கணப் பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை | Gana Porutham in Tamil

Gana Porutham in Tamil

கணப் பொருத்தம் என்றால் என்ன? | Gana Porutham Meaning in Tamil

திருமணம் என்றாலே முக்கியமாக பார்ப்பது பொருத்தம் தான். உலகில் பிறந்த எல்லோருக்கும் ஒரே மாதிரியான குண நலன்கள் இருப்பதில்லை. திருமண பொருத்தத்தில் கண பொருத்தமானது சரியாக அமைந்திருந்தால் அவர்களுடைய வாழ்க்கையானது சிறப்பாக இருக்கும். ஒரே விட்டில் பிறந்த குழந்தைகள் ஒரே குணத்தில் இருப்பது இல்லை. இந்நிலையில் வெவ்வேறு பெற்றோருக்கு பிறந்த ஆணும் பெண்ணும் ஒரே குணத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. வாங்க இந்த பதிவில் கண பொருத்தத்தால் திருமணம் செய்யும் தம்பதியரின் ஒற்றுமையும், அவர்களின் தாம்பத்திய சுகம் எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ளலாம்..

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன

கணப் பொருத்தம்:

கண பொருத்தம் என்பது கணவன் மனைவி உறவுக்குள் சண்டை இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்வார்களா என்பதை குறிக்கும் பொருத்தமாகும். திருமண பொருத்தத்தில் முக்கிய பொருத்தமாக இருப்பது கண பொருத்தம். இந்த கண பொருத்தமானது மூன்று வகைப்படும்: அவை

  1. தேவ கணம்,
  2. மனுஷ கணம்,
  3. ராட்சஸ கணம்
தேவ கணம் அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி
மனுஷ கணம் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி
ராட்சஸ கணம் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

பெண் நட்சத்திரத்தில் இருந்து 14 நட்சத்திரத்திற்கு மேல் ஆண் நட்சத்திரம் இருந்தால் பெண் ராட்சஸ கணமாக இருந்தாலும் பொருத்தமானது சுமாராகத்தான் இருக்கும்.

உதாரணம்: பெண் நட்சத்திரம் கார்த்திகை, ஆண் நட்சத்திரம் சதயம் என்பதால் பெண் நட்சத்திரம் ராட்சஸ கணம். ஆண் நட்சத்திரம் ராட்சஸ கணம். பெண் நட்சத்திரத்தில் இருந்து 14 நட்சத்திரத்திற்கு மேல் ஆண் நட்சத்திரம் இருப்பதால் பெண் ராட்சஸ கணமாக இருந்தாலும் சுமார் பொருத்தம் உண்டு.

ஒவ்வொரு கணத்தினருடைய சிறப்பு:

தேவ கணத்தை சேர்ந்தவர்கள் மனோபலம் கொண்டவர்களாக இருப்பார்கள். ராட்சஸ கணத்தை கொண்டவர்கள் உடல் பலம் மிக்கவர்களாக இருப்பார்கள். மனுஷ கணம் உள்ளவர்கள் இந்த இரு பலத்தினையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

 கணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

  • ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே கணமாக இருந்தால் அதனை மிக சிறந்த பொருத்தமாக எண்ண வேண்டும்.
  • ஆண் தேவ கண பொருத்தமும் பெண் மனித கணமுமாக இருந்தால் இதுவும் மிக நல்ல கணப் பொருத்தம் தான்.
  • பெண் தேவ கணமாகவும், ஆண் மனித கணமாகவும் இருந்தால் ஓரளவு பொருந்துகிறது எனலாம்.
  • பெண் மனித கணமும் ஆண் இராட்சத கணமுமாக இருந்தால் அது பொருந்தாது.
  • பெண் ராட்சஸ கணமாகவும் ஆண் தேவ கணமுமாக இருந்தால் அது பொருந்தாது.
யோனி பொருத்தம்

கணப்பொருத்தம் பார்க்க வேண்டிய ராசிக்காரர்கள்:

கடகம் – மகரம், சிம்மம் – கும்பம் போன்றவை சரிநிலை ராசியினர். இந்த ராசி அமைப்பை கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கண்டிப்பாக கண பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.

கண பொருத்தத்தில் விண்மீன்கள் இருப்பவை:

தேவக் கணப்பொருத்தம்: அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருவோணம், ரேவதி.

மனித கணப்பொருத்தம்: பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.

ராட்சஸ கணப்பொருத்தம்: கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.

திருமணத்திற்கு ஏன் ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது தெரியுமா?

ஈசியாக நீங்களே கணப்பொருத்தம் பார்க்கலாம்:

ஆண் தேவ கணம் திருமண பொருத்தம் உண்டு 
பெண் தேவ கணம் 
ஆண் மனுஷ கணம் திருமண பொருத்தம் உண்டு
பெண் தேவ கணம் 
ஆண் ராட்சஸ கணம் திருமண வாழ்க்கையானது சுமார்தான் 
பெண் தேவ கணம் 
ஆண் மனுஷ கணம் திருமண பொருத்தம் உண்டு
பெண் மனுஷ கணம் 
ஆண் தேவ கணம் திருமண பொருத்தம் உண்டு
பெண் மனுஷ கணம் 
ஆண் ராட்சஸ கணம் திருமண வாழ்க்கையானது சுமார்தான்
பெண் மனுஷ கணம் 
ஆண் தேவ கணம் திருமண பொருத்தம் இல்லை 
பெண் ராட்சஸ கணம் 
ஆண் மனுஷ கணம் திருமண பொருத்தம் இல்லை 
பெண் ராட்சஸ கணம் 
ஆண் ராட்சஸ கணம் திருமண பொருத்தம் இல்லை 
பெண் ராட்சஸ கணம் 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்