குருபகவான் கோவில்கள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிக பதிவில் குருபகவான் அமைந்திருக்கும் சில முக்கியமான கோவில்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். குருபகவானை வணங்குவதால் அவர் நமக்கு பல நன்மைகளையும் தருவார் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாகவே வியாழக்கிழமையில் குருபகவான் கோவிலுக்கு சென்று குருபகவானை வழிபடுவது நல்லது. குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசிக்கு இடம்பெயரும் பொழுது பல நன்மைகள் கிடைக்கின்றன. அந்த நாட்களில் குருபகவானை வழிபடாதவர்கள் இருப்பவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் ஒவ்வொரு குரு தலங்களுக்கு சென்று வரலாம். மேலும் அவை எங்குள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
சாரங்கபாணி கோவில் தல சிறப்புகள்..! |
பாடி திருவலிதாயம் கோவில்:
சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயம் என்ற இடத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் என்ற கோவிலில் குருபகவானுக்கு உகந்த கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலில் குருபகவான் சிவனிடம் ஆலோசனை கேட்டு , சிவன் விமோசனம் கொடுத்ததினால் குருவுக்கு இங்கு ஒரு சன்னதியும் அமைந்துள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தென்குடி திட்டை கோவில்:
தஞ்சைக்கு அருகில் உள்ள தென்குடி திட்டை என்னும் ஊரில் திட்டை திருத்தலம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடந்த முக்கிய விஷயம் என்னவென்றால் இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்று குருபகவான் ராஜ குருவாக இருக்கிறார். எனவே இந்த கோவில் வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு தலமாக அமைந்துள்ளது.
குருவித்துறை குருபகவான் கோவில்:
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகிலுள்ள இடத்தில் குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த பெருமாள் கோவிலில் குருபகவானும் , சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தந்து அருளுவதால் மிகவும் முக்கியமான ஸ்தலமாகவும் இருக்கிறது.
ஆலங்குடி குருபகவான் கோவில்:
திருவாரூக்கு அருகில் உள்ள ஆலங்குடி என்னும் நவக்கிரக தலங்களாக விளங்கும் இந்த கோவிலில் குருபகவானுக்கு முக்கிய விசேஷேமாக இருந்து வருகிறது. இந்த கோவில் 1900 ஆம் ஆண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலில் குருபகவான் தெற்கு கோஷ்டத்தில் அமர்ந்து மக்களுக்கு காட்சி தருகிறார். இந்த குருபகவான் மிகவும் விசேஷமாக உள்ளவர் என்பதால் விசேஷ குரு தட்சிணாமூர்த்தி கோவில் என்றும் சொல்வார்கள். தமிழகத்திலேயே குரு தட்சிணாமூர்த்தி தேரில் பவனி வருவது இந்த ஆலங்குடியில் மட்டும்தான். அதோடு மட்டுமின்றி இந்த ஊரில் உள்ளவர்களுக்கு விஷத்தால் எந்தவிதமான தீங்குகளும் ஏற்படாது என்றும் சொல்லப்படுகிறது.
பட்டமங்கலம் குரு பகவான்:
சிவங்கங்கை மாவட்டத்தில் பட்டமங்கலம் என்னும் ஊரில் குரு தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி அருள் புரிந்து வருகிறார். இந்த கோவிலின் பின்பறம் பகுதியில் ஒரு பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த மரத்தை சுற்றி சன்னதிக்கு வருமாறு அமைந்துள்ளது. இந்த கோவிலில் வியாழக்கிமை மதியம் 1 – 2 மணி நேரத்தில் அபிஷேகமும், பூஜைகளும் செய்யப்படுகிறது.
கோவிந்தவாடி அகரம் தட்சிணாமூர்த்தி:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி உள்ளது. அந்த குருத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிந்து வருகிறார். இந்த கோவில் மிகவும் சிறந்த குரு பரிகாரத் தலமாக உள்ளது. இந்த குருபகவான் வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
தக்கோலம் குரு கோவில்:
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் பகுதில் பேரம்பாக்கம் என்னும் பகுதியில் தக்கோலம் என்ற ஊர் உள்ளது. இந்த கோவிலில் குருபகவான் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். இவர் உத்கடி ஆசனத்தில் அமர்ந்து மக்களுக்கு காட்சி அளிக்கிறார்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |