செவ்வாய் தோஷம் கண்டுபிடிப்பது எப்படி | How to Calculate Sevvai Dosham in Tamil

Advertisement

செவ்வாய் தோஷம் கண்டறிவது எப்படி | Chevvai Dosham Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று ஆன்மிகம் பதிவில் முக்கியமான விஷயங்களை பற்றி பார்க்க போகிறோம். அது என்னவென்றால் செவ்வாய் தோஷம் என்றால் என்ன அதனை எப்படி கண்டுப்பிடிப்பது எப்படி. செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த நபருக்கு என்ன நடக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். ஒரு சிலர் செவ்வாய் தோஷம் என்றால் மிகவும் அச்சம் கொள்கிறர்கள். செவ்வாய் தோஷம் என்பது என்ன என்பதை பற்றி தெளிவாக படித்து கொள்வோம்.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன:

  • தோஷம் என்பது சமஸ்கிரத வார்த்தை ஆகும். அதை தமிழில் குற்றம் என்று சொல்வார்கள் அல்லது குறை என்றும் சொல்வார்கள்.

செவ்வாய் தோஷம் கண்டுப்பிடிப்பது எப்படி:

  • லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12 போன்ற இடத்தில் நின்றால் அதனை செவ்வாய் தோஷம் என்று சொல்வார்கள்.
  • ஏன் இந்த இடத்தில் இருந்தால் மட்டும் அதனை செவ்வாய் தோஷம் என்று சொல்கிறார்கள் என்றால் லக்னத்திற்கு பிறகு வரும் பாகம் 2 ஆம் பாகம், 3 பாகம், 4 ஆம் பாகம், 5 ஆம் பாகம், 6 ஆம் பாகம், 7 ஆம் பாகம், 8 ஆம் பாகம், 9 ஆம் பாகம் 10 ஆம் பாகம், 11 ஆம் பாகம், 12 ஆம் பாகம் அப்படித்தான் சொல்ல வேண்டும்.
  • செவ்வாய் ஒரு பாவ கிரகம் என்று சொல்வார்கள். அவர் இயற்கை அசுபர் என்றும் சொல்வார்கள். அதனால் அவர் இருக்கின்ற இடத்தையும் அவர் பார்வைப்படும் போது அந்த இடம் பலவீனம் அடையும் அதனால் செவ்வாய் தோஷம் என்று சொல்கிறார்கள்.
  • ஏன் இந்த பாகத்தில் இருந்தால் தோஷம் என்று சொல்கிறார்கள் ? இரண்டாம் பாகம் என்பது குடும்பஸ்தானம் என்பது ஆகும். செவ்வாய் தோஷத்தில் உள்ளவர்களின் குடும்பத்தின் நன்மை தீமையை சொல்லும் இந்த இரண்டாம் பாகம்.
  • செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் ஒழுக்கத்தையும் அவர்களின் நடைமுறையையும் சொல்வது நான்காம் பாகம்.
  • செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்க்கை துணையை பற்றி சொல்வது ஏழாம் பாகம்.

செவ்வாய் தோஷம் கண்டறிவது எப்படி:

  • கணவரின் ஆயுட்காலத்தை காட்டுவது எட்டாம் பாகம்.
  • தாம்பத்தியம் வாழ்க்கை முறையின் நன்மை தீமைகளை குறிப்பிடுவது பன்னிரண்டாம் பாகம்.
  • குடும்பம் சம்பந்தமான எல்லா பாகத்தையும் இதன் பார்வைபட்டால் குறைவாக இருக்கும் என்பதை கணித்து கூறிருப்பார்கள்.
  • இதே போல் செவ்வாய் ஏழாம் இடத்தில் இருந்தால் என்ன? செவ்வாய்க்கு மூன்று பார்வை இருக்கும் அது என்னவென்றால் 8, 4, 7 இதில் கொடிய பார்வை என்று  சொல்லக்கூடியது 8, செவ்வாய் ஏழில் இருந்தால் தனது கொடிய பார்வையான எட்டாம் பார்வையால் இரண்டாம் இடத்தை பார்ப்பார்.
  • செவ்வாய் நான்காம் இடத்தில் இருந்தால் நான்காம் பார்வையாக ஏழாம் இடத்தையும் பன்னிரண்டில் இருந்தால் எட்டாம் பார்வையாக ஏழாம் இடத்தையும் எட்டில் இருக்கும் பொழுது நேரடியாக குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தையும் இரண்டில் இருந்தால் எட்டாம் இடத்தை பார்த்து நமக்கு தீமையை அளிப்பார். இதனால் தான் இதனை செவ்வாய் தோஷம் என்று சொல்வார்கள்.

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்..! செவ்வாய் தோஷம் நிவர்த்தி..! 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement