செல்வ செழிப்பிற்கு இந்த கயிற்றை கையில் கட்டினால் போதுமா.!

kaiyil kayiru kattum murai

கையில் கயிறு கட்டுவது ஏன்.?

கையில் பல நபர்கள் கயிறு கட்டுவார்கள். அதிலும் கருப்பு கயிறு, சிவப்பு கயிறு, பச்சை கயிறு என கட்டுவார்கள். ஆண்கள், பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கயிறும் கட்டுவார்கள். ஒவ்வொரு கயிறு கட்டுவதற்கான பலன்களை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

கயிறு கட்டும் முறை:

நீங்கள் எந்த கயிறை கட்டினாலும், ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்ட வேண்டும்.

கயிறை கட்டும் பொழுது முடிச்சு போட்டு கட்ட வேண்டும். அதுவும் ஒற்றை படையில் 3, 5, 7, 9 என்ற எண்களில் முடிச்சு போட்டு கட்ட வேண்டும். இல்லையென்றால் 5 முடிச்சு போட்டு கட்டுவது நல்லது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. காமம், குரோதம், பொறாமை, ஆணவம், வஞ்சம் போன்ற எண்ணங்களை அளிக்கிறது. 

கோவில்களில் சாமி பாதத்தில் வைத்து கயிற்றை கட்டுவது நல்லது.

சில நபர்கள் கயிற்றை கட்டி அது நஞ்சு போகின்ற அளவிற்கு வரும் வரி கையில் கட்டியிருப்பார்கள். 48 நாட்களுக்கு பிறகு  கயிற்றை ஆற்றில் போட்டு விட்டு புதிதாக  கட்ட வேண்டும்.

காலில் கருப்பு கயிறு கட்டுவது எதற்கு தெரியுமா?

கருப்பு கயிறு:

கருப்பு கயிறு

கருப்பு கயிறு திருஷ்டிக்காக கட்டப்படுகிறது. உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருப்பதற்காக கட்டப்படுகிறது.

சிவப்பு கயிறு:

சிவப்பு கயிறு

சிவப்பு கயிறு செல்வ செழிப்போடு இருப்பதற்கு கட்டப்படுகிறது. மேலும் நீண்ட ஆயுளையும், எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவும், தீய எண்ணங்கள் இல்லாமல் இருக்கவும் கட்டப்படுகிறது.

மஞ்சள் கயிறு:

மஞ்சள் கயிறு

இந்த கயிறு நல்ல எண்ணங்களையும், செல்வ செழிப்போடு இருப்பதற்காகவும் கட்டப்படுகிறது.

காலில் கட்டும் கயிறு:

காலில் கருப்பு கயிறு கட்டும் முறை

காலில் கருப்பு கயிறு கட்டுவது திருஷ்டிக்காக கட்டப்படுகிறது. இந்த கயிற்றை சனி கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டுவது நல்ல பலனை தரும்.

காலில் கட்டும் கயிற்றை ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கட்ட வேண்டும். 9 முடிச்சு போட்டு கட்டுவது நல்லது.

பிறந்த தேதியை வைத்து அரசு வேலை கிடைப்பதை கணிக்க முடியும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்