பிறந்த தேதியை வைத்து அரசு வேலை கிடைப்பதை கணிக்க முடியும்

which zodiac will get government job in tamil

அரசு வேலை கிடைக்கும் ராசி 2023 | Which Zodiac Will Get Government Job 

பெரும்பாலானவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் எல்லாருக்கும் அரசு வேலை கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அரசு வேலைக்கு போட்டிகள் அதிகமாக இருக்கிறது. அதற்காக மணி கணக்காக படிக்கின்றனர். முயற்சியோடு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் தான் அரசு வேலை கிடைக்கும்.

எண் கணிதத்தின் கருத்துப்படி, ஒரு நபரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரம் ஆகியவை ஒரு நபரின் வேலை விவரங்களைக் கணிக்க உதவுகிறது. எண் கணிதம் மற்றும் ஜோதிடத்தின் படி அரசு வேலை கிடைப்பதில் சூரியன், வியாழன், சனி முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் பிறந்த தேதியை வைத்து யார் யாருக்கெல்லாம் அரசு வேலை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Which Zodiac Will Get Government Job 

அரசு வேலை கிடைக்கும் ராசி

சூரியன்:

சூரிய கிரகத்திற்கு உகந்த எண் 1 ஆகும். உங்களின் பிறந்த தேதி 1,10,19, 28 போன்ற தேதிகளில் பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. சூரியன் வலுவாக உள்ளவர்களுக்கு அரசு கிடைக்க வாய்ப்புள்ளது. நேரத்தை வைத்து பார்க்கும் போது 1,10,19,28 போன்ற தேதிகளில் விடியற்காலை முதல் மதியம் வரை பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த ராசிகாரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு திடீர் திருமணம் நடக்கும்..!

வியாழன்:

வியாழன் கிரகத்திற்கு உகந்த எண்ணாக 3 உள்ளது. உங்களின் பிறந்த தேதி 3, 12, 21 போன்ற தேதிகளில் பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த தேதிகளில் நேரத்தை பொறுத்தவரை விடியற்காலை முதல் மதியம் வரை பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வியாழன் ஞானம், அறிவு, புத்திசாலித்தனம், செழிப்பு, வெற்றி, புகழ் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை தர கூடியது.

சனி:

சனி கிரகத்திற்கு உகந்த எண்ணாக 8 இருக்கிறது. அதனால் 8,17, 26 போன்ற தேதிகளில் பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த தேதிகளில் நேரத்தை பொறுத்த வரை விடியற்காலை முதல் மதியம் வரை பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. சனி ஒழுக்கம், ஆன்மீகம், நட்பு,  ஞானத்தை குறிக்கிறது. தொழிற்சாலை வேலை மற்றும் ரயில்வே போன்ற துறைகளில் அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

அரசு வேலை கிடைக்க கூடிய ராசிகள்:

ஜோதிட சாஸ்திரத்தின் படி அரசு வேலை கிடைக்க முக்கிய கிரகமாக இருப்பதற்கு சூரியன், செவ்வாய், வியாழன், சனி போன்றவை காரணமாக இருக்கிறது. இதனால் மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம்,விருச்சிகம் போன்ற ராசி உடையவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்? இந்த தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டதால் வாழ்க்கை அமோகமாக இருக்கும் .

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்