காளை மாடு கனவில் வந்தால் பலன் | Kalai Madu Kanavil Vanthal Enna Palan Tamil
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! தினமும் நாம் தூங்கும் போது கனவுகள் வரும். அத்தகைய கனவுகள் ஆனது பறவைகள், விலங்குகள், பூக்கள் மற்றும் மனிதர்கள் என இதுபோன்ற கனவுகளாக இருக்கும். ஒரு சிலருக்கு இவற்றை எல்லாம் தாண்டி வெளி ஊருக்கு செல்வது போன்ற கனவுகள் வரும். ஆனால் இதுமாதிரி நமக்கு கனவுகள் வருவதற்கு ஆன்மீகத்தில் ஒவ்வொரு பலன்கள் அல்லது அர்த்தங்கள் கூறப்படுகிறது.
அந்த வகையில் நாம் மாட்டினை நேரில் பார்க்கும் போது சாதாரணமாக எதுவும் நினைக்க மாட்டோம். ஆனால் கனவில் வந்தால் அவ்வளவு தான் என்ன நடக்குப் போகிறது என்ற சிந்தனையிலேயே இருப்போம். ஆகையால் இன்றைய பதிவின் வாயிலாக காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
உங்களை நீங்களே கனவில் கண்டால் என்ன பலன்
கனவில் காளை மாடு வந்தால் என்ன பலன்:
நம்முடைய கனவில் காளை மாட்டை கனவில் கண்டால் உங்களது செல்வ நிலை உயரும். அதுமட்டுமில்லாமல் அழகு, கவர்ச்சி, பலம் போன்றவை அதிகரிக்க கூடுமாம். ஆண்களின் கனவில் காளை மாட்டை கண்டால் காதல் வர போகிறது என்று அர்த்தம். அதுவே பெண்களின் கனவில் காளை மாட்டை கனவில் கண்டால் மன கஷ்டம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் என்பதனை இந்த கனவு உணர்த்துகிறது.காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
உங்களுடைய தூக்கத்தில் காளை மாடு துரத்துவது போல கனவு வந்தால் உங்களுக்கு வரப்போகும் ஏதேனும் ஆபத்தினை உணர்த்துவதற்கான அர்த்தமாக கூறப்படுகிறது. ஆகையால் இதுமாதிரி கனவு வருவது நல்லது இல்லை என்றும் கூறப்படுகிறது.
காளை மாடு முட்ட வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
அதுவே கனவில் காளை மாடு முட்ட வருவது போல் நீங்கள் கனவு வந்தால் அதற்கான பலன் ஆனது நல்லது அல்ல. ஏனென்றால் உங்களுக்கு விபத்து மற்றும் மருத்துவ செலவுகள் இதுபோன்றவற்றை ஏற்படுவது முன்கூட்டியே உணர்த்தும் விதமாக கூறப்படுகிறது.
காளை மாடு மிதிப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்:
கனவில் நமக்கு காளை மாடு மிதிப்பது போல கனவு வந்தால் இதுநாள் வரையிலும் நமக்கு இருந்த பிரச்சனைகள் யாவும் விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக குறையப்போகிறது என்பதை உணர்த்தும் அர்த்தமாக கூறப்படுகிறது.
வெள்ளை காளை மாடு கனவில் வந்தால்:
உங்களுடைய கனவில் வெள்ளை காளை மாடு கனவில் வந்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியாக வாழ போகிறீர்கள் என்பது குறிக்கிறது.
கருப்பு காளை மாடு கனவில் வந்தால்:
அதுவே கனவில் கருப்பு காளை மாடு வந்தால் ஏதோ ஒரு துன்ப செய்தி வரப்போகிறது என்பதை உணர்த்தி கவனமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.
மாட்டு சாணம் கனவில் வந்தால் என்ன பலன்:
மாட்டு சாணத்தை கனவில் கண்டால் உங்களின் குடும்பத்தில் உள்ள பிரச்சனை நீங்கும். மேலும் இதுவரை ஏதேனும் காரியங்கள் தடைப்பட்டு இருந்தாலும் அவை முடிவுக்கு வரும்.
எருமை கனவில் வந்தால் என்ன பலன் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |