கண் திருஷ்டி போகுவதற்கு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்..

கண் திருஷ்டி நீங்க என்ன செய்யலாம்

ஆன்மிக நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்..! கல்லடி பட்டாலும் கண்ணடி பட கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். மற்றவர்கள் நம்மை பார்ப்பதில் ஒரு கெட்ட எண்ணம் ஏற்படுவதுதான் கண் திருஷ்டி. இந்த கண் திருஷ்டியை போக்குவதற்கு எளிமையான பரிகாரங்களை பற்றி தெரிந்துகொள்வோம். கண் திருஷ்டி என்பது இவர்களுக்கு தான் வரும். இவர்களுக்கு வராது என்று இல்லை. எல்லாருக்கும் கண் திருஷ்டி ஏற்படும். உடல் நிலை சரி இல்லாமல் போவது மற்றும் கெட்ட எண்ணங்களை நினைத்து கொண்டிருப்பது, உங்கள் செயல்களில் மாற்றம் போன்றவற்றை வைத்து முன்னோர்கள் கணித்து சொல்வார்கள் யாரு கண்ணு பட்டதோ என் பிள்ளை இப்படி ஆகிட்டான் என்று சொல்வார்கள். கண் திருஷ்டிக்கு நீக்குவதற்கு என்ன செய்வது இந்த பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ கண் திருஷ்டி என்பது உண்மையா ? பொய்யா ?

திருஷ்டி மிளகாய்:

திருஷ்டி மிளகாய்

திருஷ்டி சுத்துவதற்கு உகந்த நேரம் மாலை நேரம். திருஷ்டி சுத்துபவர்கள் பெரியவர்களாக இருக்க வேண்டும்.

திருஷ்டியை செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தான் சுற்றி போட வேண்டும். காய்ந்த மிளகாய் 5, கல் உப்பு சிறிதளவு இரண்டையும் எடுத்து இடது கையில் வைத்து கொள்ள வேண்டும்.

திருஷ்டி உள்ளவர்களை நிற்க சொல்லி வலமிருந்து இடம் மூன்று முறை சுற்ற வேண்டும். சுற்றிய பிறகு கையில் எச்சி துப்ப சொல்ல வேண்டும். பின் காலுக்கு கீழவைத்து நெட்டி முறிக்க வேண்டும்.

வீட்டில் அடுப்பில் நெருப்பு இருக்கும். அதில் திருஷ்டி சுற்றியதை போட வேண்டும். திருஷ்டி சுத்தியதை நெருப்பில் போட்ட பிறகு நமக்கு தும்மல் மற்றும் மிளகாய் நெடும் ஏறும் என்று சொல்வார்கள்.

இது போல எதும் ஏற்படவில்லை என்றால் திருஷ்டி நிறைய இருக்குது என்று அர்த்தமாம். அதுவே தும்மல் ஏற்பட்டு மிளகாய் பொறிந்தது  என்றால் திருஷ்டி கழிந்து விட்டது என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

எலுமிச்சம் பழ கண் திருஷ்டி கழிப்பது எப்படி.?

கண் திருஷ்டி நீங்க என்ன செய்யலாம்

கண் திருஷ்டியை போக்குவதற்கு எலுமிச்சைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் வீட்டு வாசலில் எலுமிச்சைப்பழம், இரும்பு கம்பி, பச்சை மிளகாய், கரி கட்டை போன்றவற்றை சேர்த்து வாசலில் கட்ட வேண்டும். தலையில் படாத அளவிற்கு கட்ட வேண்டும்.

எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் குங்குமத்தை தடவி வீட்டின் வாசலில் வையுங்கள். இப்படி வைப்பதனால் கண் திருஷ்டி நீங்கும்.

மீன் தொட்டி:மீன் தொட்டி

 

பல பேர் வீட்டில் மீன் தொட்டி உள்ளது. இந்த மீன் தொட்டி அழகுக்காக வைக்கலாம் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த மீன் தொட்டியை வாசலில் அல்லது பார்வை படும்படி உள்ள இடத்தில் வைத்தால் கண் திருஷ்டி அழிந்து விடும்.

பாத்திரத்தில் பூக்கள்:

பாத்திரத்தில் பூக்கள்

ஒரு பித்தளை பாத்திரம் அல்லது சில்வர் பாத்திரத்தில் வாசலில் தண்ணீர் ஊற்றி பூக்களை வைத்திருப்பார்கள். இதுவும் அழகுக்காக வைத்திருப்பார்கள். ஆனால் ஆன்மிகத்தில் இப்படி வைப்பதனால் கண் திருஷ்டி நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

கண் திருஷ்டி கணபதி படங்கள்:

கண் திருஷ்டி கணபதி படங்கள்

வீட்டு வாசலில் விநாயகர் படத்தை மாட்டி வையுங்கள். அதுமட்டுமில்லாமல் குதிரையின் போட்டாவை வாசலில் மாட்டி வைத்தாலும் கண் திருஷ்டி நீங்கும்.

மேல் கூறப்பட்டுள்ள பரிகாரத்தில் எதாவது ஒன்றை செய்தால் கண் திருஷ்டி நீங்கி விடும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்