நாய் துரவுத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா..?

Advertisement

Kanavil Nai Thurathinal Enna Palan | கனவில் நாய் துரத்துவது போல் வந்தால் என்ன பலன்

பொதுவாக சிலருக்கு சிலரின் மீது மரியாதை இருக்கும். அதுவே மற்ற சிலருக்கு பயம் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான மக்களுக்கு நாயினை பார்த்தாலே தன்னை அறியாமல் ஏதோ ஒரு பயம் வந்துவிடும். அதிலும் சிலருக்கு கனவில் கூட எப்போதும் நாய் கனவு தான் வரும் என்பார்கள். அதுமட்டும் இல்லாமல் நாய் கனவில் சும்மா வராமல் கடிப்பது போல, துரவுத்துவது போல மற்றும் விளையாடுவது போல நிறைய கனவுகள் வரும். கனவில் நாய் வந்தாலே பயமாக இருக்கும். அதுவே துரத்துவது போல கனவு வந்தால் சொல்லவே வேண்டாம் நமக்கு பயம் அதிகரித்து அதற்கான பலன் என்னவாக இருக்கும் என்று யோசிப்போம். அதனால் இன்றைய பதிவில் நாய் துரவுத்துவது போல கனவு வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

எருமை கனவில் வந்தால் என்ன பலன்

கனவில் நாய் துரத்தினால் என்ன பலன்:

கனவில் நாய் துரத்தினால் என்ன பலன்

நாய் என்பது பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு செல்ல பிராணியாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளில் நன்றிக்கு எடுத்துக்காட்டாக இருப்பது எதுவென்றால் அது நாய் மட்டும் தான்.

அதுமட்டும் இல்லாமல் நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் என்றும், இதனுடைய ஆயுட்காலம் 10 முதல் 13 வருடம் மட்டுமே என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

இத்தகைய நாய் உங்களுடைய கனவில் துரத்துவது போல கனவு வந்தால் உங்களுக்கு சில சிக்கல்கள் வரப்போவதை உணர்த்துவதாக கூறப்படுகிறது. அதனால் நீங்கள் எந்த சிக்கலையும் சமாளிக்க தயாரா இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே இந்த கனவு உங்களுக்கு உணர்த்துவதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் நீங்கள் யாரிடமாவது ஏதாவது உதவியினை எதிர்பார்த்து கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த உதவி கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்பது கனவில் நாய் துரத்துவதற்கான அர்த்தம் ஆகும்.

ஆகையால் நாய் துரத்துவது போல உங்களுக்கு கனவு வந்தால் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடனும், கவனமாக இருத்தல் நல்லது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ நாய் கடிப்பது போல கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா.. 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement