சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் வரலாறு..! Kapaleeswarar temple history in tamil..!
Kapaleeswarar temple history in tamil:- கபாலீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ளது. இது சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கபாலீசுவரர் கோயில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும்.
இங்குள்ள சிவன் கபாலீசுவரராக அருள்பாலிக்கின்றார், அம்பாள் கற்பகாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிவனை மனமுருகி வேண்டி பிராத்தனை செய்வதினால் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் அயராத நம்பிக்கையாகும்.
சரி இந்த பதிவில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் வரலாறு (Kapaleeswarar temple history in tamil) மற்றும் அதன் சிறப்பு அம்சங்களை இங்கு படித்தறிவோம் வாங்க.
தஞ்சை பெரிய கோவில் வரலாறு ..! |
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் வரலாறு / Kapaleeswarar temple history in tamil:
இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை சேர்ந்த பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்.
பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பின் பல ஆண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் – தல சிறப்பு:
Kapaleeswarar temple history in tamil:- இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார், சிவனின் தேவார பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 வது தேவாரதலமாகும். இங்குள்ள சிவன் மேற்கு பார்த்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் – பிராத்தனைகள்:
Kapaleeswarar temple history in tamil:- இங்குள்ள சிவனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைப்பது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு அம்சமாகும்.
உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயாக இருந்தாலும் இங்குள்ள அம்பாளை வணங்கினால் மிக விரைவில் குணமாகிவிடும். மேலும் திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கும்.
காசி விஸ்வநாதர் திருக்கோயில் (Kashi Vishwanath Temple)..! |
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் – நேர்த்திக்கடன்:
Kapaleeswarar temple history in tamil:- நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தின் முக்கிய திருவிழாவான அறுபத்து மூவர் திருவிழாவான 8-ம் நாள் அன்று மண்பானையில் சர்க்கரை வைத்து விநியோகம் செய்கின்றார்கள்.
அம்பாளுக்கு புடவை சாத்துவது, சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்யலாம்.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் திறக்கும் நேரம்:
- காலை 06.00 மணி முதல் 12.30 மணி வரை ஆலயம் திறக்கப்படும்.
- பின் மாலை 04.00 மணி முதல், இரவு 09.30 மணி முதல் திறக்கப்படுகிறது.
ஆலயம் முகவரி:
- நிர்வாக அதிகாரி, அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை 600 004.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |