கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் 2023 | Karthigai Deepam Vilakku Etrum Neram

திருகார்த்திகை தீபம் ஏற்ற உகந்த நேரம்

கார்த்திகை தீபம் 2023: தமிழ்நாட்டில் கார்த்திகை தீப விழாவானது வரும் ஞாயிற்றுக்கிழமை (26.11.2023) அன்று கொண்டாடப்பட உள்ளது. நம்முடைய வீட்டில் கார்த்திகை திருநாள் அன்று 27 விளக்குகள் ஏற்றி வழிப்படுவது நம்முடைய பாரம்பரிய ஐதீகமாகும். 27 விளக்குகள் ஏற்றி வழிபட முடியாதவர்கள் குறைந்தது 9 தீபங்களை ஏற்றி இறைவனுக்கு வழிபாடு செய்யலாம். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு அனைவரும் அவர்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி மகிழலாம். திருக்கார்த்திகை அன்று விளக்கு ஏற்ற நல்ல நேரம் (karthigai deepam nalla neram) எது என்று அனைவரும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அதனை தொடர்ந்து இந்த பதிவில் கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் என்று தெரிந்துக்கொள்ளலாம்.

கார்த்திகை தீபம் வரலாறு

கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் 2023:

கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் 2021

திருகார்த்திகை 2023 கிழமை  ⭐திருகார்த்திகை தீபம் ஏற்ற உகந்த நேரம் 2023⭐
26.11.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 06:00 PM 

 

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

கார்த்திகை தீபம் சிறப்பு:

 karthigai deepam vilakku etrum neram

கார்த்திகை விளக்கீடு 2023: அகல் விளக்குகளில் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொண்டு பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் அல்லது நெய் தவிர வேறு எண்ணெய்களை உபயோகப்படுத்த வேண்டாம்.

பெரிய அகல் விளக்கில் முதலில் ஒரு தீபத்தில் தீக்குச்சியால் ஏற்றி வைத்து விட்டு பின்னர் மற்ற தீபங்களை அந்த முதல் தீபத்தில் ஒளிரும் ஜோதியில் இருந்து ஏற்றி வர வேண்டும். ஒரு தீபத்திலிருந்து மற்ற தீபங்களை ஏற்றுவது தான் கார்த்திகை தீபத்தின் சிறப்பம்சம்.

கார்த்திகை தீபம் முறையாக ஏற்றுவது எப்படி..?

 

கார்த்திகை அன்று வீட்டில் தீபம் ஏற்றி வைக்கும் போது கண்டிப்பாக ஒரு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்