உங்கள் வீட்டு சமையலறையை வாஸ்துப்படி இப்படி வைத்துள்ளீர்களா .!

Advertisement

வாஸ்து படி சமையல் அறை

நம் வீடு கட்டுவதற்கு முன் வாஸ்து படி வீடு காட்டுவோம். ஆனால் சமயலறையை வாஸ்து படி வைத்திருப்போம். ஆனால் அதில் உள்ள அடுப்பு, திசை, பாத்திரம் வழக்கும் இடம் போன்றவை வாஸ்து படி வைத்திருப்போமா.! வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகமாக இருக்க கூடிய இடம் என்றால் அடுப்படி தான். அதிலும் நமக்கு உணவை தர கூடிய இடம். அதனால் வீடு கட்டுவதற்கு முன் அமைதி மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க சமயலறையை வாஸ்து படி இப்படி கட்டுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ வாஸ்து சாஸ்திரம் வீடு கட்ட

சமையலறை அமைப்பு:

சமையலறை அமைப்பு

வீட்டில் சமையலறை தென்கிழக்கு திசை மூலையை நோக்கி அமைத்தல்  வேண்டும். இந்த திசை அமையவில்லை என்றால் வடமேற்கு திசையில் வைக்கலாம்.

அடுப்பு வைக்கும் திசை:

அடுப்பு வைக்கும் திசை

வீட்டின் சமையலறை தென்கிழக்கு திசையில் அமைந்துவிட்டது. அடுத்து அடுப்பும் தென் கிழக்கு திசையில் தான் இருக்க வேண்டும். சமைப்பவர் கிழக்கு நின்று சமைப்பது போல் அடுப்பு இருக்க வேண்டும்.

பாத்திரம் கழுவும் தொட்டி: 

பாத்திரம் கழுவும் தொட்டி

பாத்திரம் கழுவும் இடமெல்லாம் வாஸ்து படி வைக்க வேண்டுமா என்று யோசிக்காதீர்கள்.! வாஸ்து படி பாத்திரம் கழுவும் சிங்க் வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும்.

ஜன்னல் கதவு:

ஜன்னல் கதவு

வீட்டின்  காற்றோட்டமாக இருப்பதற்காக ஜன்னல் வைக்கின்றோம். அதிலும் சமையலறையில் உள்ள ஜன்னல் முக்கியமானது. சமையலறையில் ஜன்னல் இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. வாஸ்து படி ஜன்னலை கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

கபோர்டு திசை:

கபோர்டு திசை

சமயலறையில் கபோர்டு கண்டிப்பாக இருக்கும். அதை வாஸ்துப்படி தெற்கு மற்றும் மேற்கு திசையில் கபோர்டு மற்றும் அலமாரியை வைக்கலாம்.

வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள்:

வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள்

வீட்டில் நாம் பயன்படுத்தும் மின்சாதன பொருட்களான கிரைண்டர், மிக்சி, குளிர்சாதனப்பெட்டி, மைக்ரோவேவ் போன்றவைகளை தெற்கு அல்லது தென்கிழக்கு திசையில் உள்ளவாறு வைக்க வேண்டும்.

என்ன கலர்:

என்ன கலர்

சமையலறைக்கு பச்சை, மஞ்சள், சிவப்பு, சாக்லேட், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களை பயன்படுத்துவது நல்லது. கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

சமையலறையின் தரை எப்பொழுதும் சுத்தமாகவும்,  பளபளப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும்.

சமையலறையை போதுமான அளவுக்கு சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement