குங்குமம் கீழே கொட்டினால் என்ன பலன்
வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! அனைவருடைய வீட்டிலும் குங்குமம், விபூதி, சந்தனம் பூஜை அறையில் இருப்பது வழக்கம். எல்லோரும் சாமி கும்பிடும் போது அதை நெற்றியில் வைத்து கொள்வார்கள். அதுமட்டும் இல்லாமல் சுமங்கலி பெண்கள் குங்குமத்திற்கு என்று ஒரு தனி மரியாதையை கொடுப்பார்கள். அத்தகைய குங்குமம் சில நேரத்தில் நம்மை அறியாமல் கை தவறி கீழே கொட்டிவிடும். உடனே குங்குமம் கீழே கொட்டி விட்டது என்ன நடக்க போகுது என்று தெரியாமல் அச்சம் கொள்வார்கள். ஆகையால் இன்றைய பதிவில் குங்குமம் கீழே கொட்டினால் என்ன பலன் என்பதை பற்றி விரிவாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ கருநாக்கு உள்ளவர்கள் சொல்லும் வாக்கு பலிக்குமா.! பலிக்காதா.! உங்களுக்கு தெரியுமா..?
குங்குமம் கீழே கொட்டினால் நல்லதா.! கெட்டதா.!:
குங்குமம் என்பது தெய்வத்தின் பிரசாதமாக கருதப்படுகிறது. இந்த குங்குமம் பெண்களின் நெற்றியில் வைக்கும் போது அவர்களின் திஷ்டிரி முழுவதும் நீக்க படுகிறது என்று ஆன்மீகத்தில் சொல்கிறார்கள்.
அதே நேரத்தில் ஆண்கள் குங்குமத்தை நெற்றியில் வைக்கும் போது அவர்களுக்கு இவ்வளவு மகத்துவம் இல்லை என்றும் சாஸ்திரத்தில் சொல்கிறார்கள்.
பெண்கள் குங்குமத்தை நெற்றியில் வைக்கும் போது அவர்களுக்கு என்று ஒரு தனி லட்சுமி கடாச்சம் வருகிறது என்றும் சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
அத்தகைய குங்குமத்தை பெண்கள் கை தவறி கீழே கொட்ட கூடாது என்று ஆன்மீகத்தில் சொல்கிறார்கள்.
உங்களின் கையில் இருந்து குங்குமம் கீழே கொட்டும் போது உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை முன்க் கூட்டியே உணர்த்துக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் திருமணமான பெண்களின் கையில் இருந்து குங்குமம் கொட்டும் போது அது உங்கள் கணவரின் ஆரோக்கியம், பணி ரீதியாக வரப்போகும் ஆபத்தை உங்களுக்கு தெரியப்படுத்துகிறது என்று ஆன்மீகத்தில் சொல்கிரார்கள்.
அதுபோல செவ்வாய், ஞாயிறு இதுபோன்ற நாட்களில் கை தவறி குங்குமம் கீழே கொட்டினால் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் குடுபத்திற்கு நஷ்டம் வரப்போகிறது என்பதனை முன் கூட்டியே உணர்த்தும் தன்மை குங்குமத்திற்கு இருக்கிறது.
அத்தைய குங்குமம் மாலை நேரங்களில் கீழே கொட்டும் போது உடலில் நோய் சம்பந்தப்பட்ட அறிகுறிகளை உணர்த்துகிறது.
வெள்ளி கிழமை எப்போதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நாளாக இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்கிறார்கள். அந்த நாளன்று குங்குமம் கீழே கொட்டினால் நீங்கள் எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தாலும் உங்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் வரவும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
அதனால் உங்களுக்கு வரப்போகும் ஆபத்து எதுவாக இருந்தாலும் அதை வரும் முன் காப்பதே சிறந்தது என்பது போல எந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |