குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் | Kurai Ondrum Illai Lyrics in Tamil

Kurai Ondrum Illai Lyrics in Tamil

குறை ஒன்றும் இல்லை பாடல் ஆசிரியர் | Kurai Ondrum illai Lyrics Written By in Tamil 

வணக்கம் நண்பர்களே..! நாம் பார்க்க போகிறது மனதை ஒருநிலைப்படுத்தும் பாடலை பற்றிதான். குறை ஒன்றும் இல்லை என்னும் பாடல் கேட்கும் பொழுது மனதில் அமைதி கிடைக்கும். இந்த பாடல் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடல். இவர் குரல் இன்னும் அமைதியான மனப்பான்மையை அளிக்கிறது. இந்த பாடல் திருப்பதியில் இருக்கும் திருவேங்கடவனை போற்றி பாடும் பாடல் ஆகும். இந்த பாடல் வீடேங்கும் ஒலித்து கொண்டிருக்கும். இந்த பாடலை எழுதியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆவார். 1967ஆம் ஆண்டு கல்கி என்னும் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம்.

குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் | Kurai Ondrum illai Ragam:

கிருஷ்ணன்

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா..!

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் 1 -வது சரணம்:

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…!

Kurai Ondrum Illai Marai Moorthy Kanna Lyrics in Tamil . 2 -வது சரணம்:

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா..!

குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் 3 -வது சரணம்:

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதாஞ்
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா..!

குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் 4 -வது சரணம்:

கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா..!

Kurai Ondrum Illai Marai Moorthy Kanna Song in Tamil 5 -வது சரணம்:

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…!

முத்தைத்தரு பத்தித் திருநகை திருப்புகழ் பாடல்

பொருள்:

குந்தி தேவி கிருஷ்ண பரமாத்மாவிடம் எனக்கும் எப்போதும் துன்பத்தை மட்டும் தா கண்ணா என்ற வரம் கேட்டால். ஏன்னென்றால் உன் நினைவு எப்போதும் எனக்கு கிடைக்க வேண்டும் கண்ணா. எனக்கு இந்த வரத்தை தா கண்ணா. இது தான் பாடலின் பொருள் ஆகும்.

பாடல் குறிப்பு:

பாடலை எழுதியவர்: சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி.
பாடலின் இசை அமைத்தவர்: கடையநல்லூர் வெங்கட்ராமன்.
பாடலை பாடியவர்: எம்.எஸ்.சுப்புலட்சுமி.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்