முத்தைத்தரு பத்தித் திருநகை திருப்புகழ் பாடல் | Muthai Tharu Lyrics in Tamil

Muthai Tharu Lyrics in Tamil

முத்தைத்தரு பத்தித் திருநகை பாட்டு | Muthai Tharu Song Lyrics in Tamil

ஆன்மீக அன்பர்களுக்கு மகிழ்வான வணக்கம்.. இந்து மாதத்தில் கடவுள் வகைகளில் பல வகையான கடவுள்கள் உள்ளார்கள். ஒருவருக்கு பிள்ளையார் பிடிக்கும், ஒருவருக்கு ஐயப்பன், ஒருவருக்கு பெண் சார்ந்த கடவுள்கள் பிடிக்கும். வருடந்தோறும் டிசம்பர் 31-ந் தேதி மலைமேல் உள்ள முருகன் கோவில்களில் படி உற்சவம் என்ற விழா சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் குழுவாக சேர்ந்து மலைப்படிகளில் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ் பாடல்களைப் பாடுவார்கள். இவ்விழா அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் முருகப்பெருமானை தரிசிக்கும் ஆன்மீகத்தவர்களுக்கு முருகனுக்கு உகந்த பாடலான முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகளை (muthai tharu lyrics in tamil) படித்து முருகனின் அருளை பெறுவோம்.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள்:

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்