Kurusandala Yoga Will Cause Problems For These Zodiac Signs
ஒன்பது கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு மற்றும் கேது ஆகியவற்றின் பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டே 12 ராசிகளின் ராசி பலனும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கும். அந்த வகையில் குரு சண்டாள யோகம் உண்டானால் அனைவருமே அதனை நினைத்து அஞ்சுவார்கள். ஏனென்றால் அவற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும். குரு சண்டாள யோகம் என்பது குருவும் ராகுவும் இணைவதால் ஏற்படுவதாகும். இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி வியாழன் மேஷ ராசியில் நுழைந்தார். அதனை தொடர்ந்து ராகுவும் மேஷ ராசியில் நுழைந்தார். இவற்றின் பலனாக குரு சண்டாள யோகம் உருவாகி உள்ளது. இதனால் அக்டோபர் 30 -ஆம் தேதி வரை சில ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே குரு சண்டாள யோகத்தால் பிரச்சனைகளுக்கு ஆளாகும் அந்த 5 ராசிக்காரர்கள் யாரென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குரு சண்டாள யோகம் பலன்கள்:
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு சண்டாள யோகம் 11-ஆம் வீட்டில் நுழைகிறது. இதனால் மிதுன ராசிக்காரர்கள் பல பிரச்சனையை சந்திக்க நேரிடும். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். பெரும்பாலும் இக்காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கெட்ட பெயர் உண்டாகும். மேலும் பணியிடத்தில் பல நெருக்கடிகள் ஏற்படும். எனவே எந்தவொரு செயலையும் சிந்தித்து செய்வது அவசியம்.
மீன ராசி:
மீன ராசியின் இரண்டாவது வீட்டில் குருசண்டாள யோகம் நுழைகிறது. இதனால் மீன ராசிக்காரர்கள் சிந்தித்து கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் மீன ராசிக்காரர்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மன ஆரோக்கியத்தை அளிக்கலாம். இதனால் பணியிடத்தில் மோசமான விளைவுகள் உண்டாகும். எனவே மீன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசி:
கன்னி ராசியின் 8-வது வீட்டில் குரு சண்டாள யோகம் நுழைகிறது. இதனால் உங்கள் வாழ்க்கையில் பல மோசமான விளைவுகள் உண்டாகும். கன்னி ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் தாயின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகும். பணம் செலவிடும் போது கவனமாக இருக்க வேண்டும். எனவே கன்னி ராசிக்காரர்கள் இக்காலத்தில் பல சச்சரவுகளுக்கு ஆளாவார்கள்.
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு சண்டாள யோகம் பல மாற்றங்களை அளிக்கும். இதன் படி பார்க்கையில் ஏதாவதொரு பிரச்சனையில் சிக்கி எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். சிறிய பிரச்சனைகள் கூட மோசமான நிலைக்கு தள்ளப்படும். வேலை இடத்தில் கவனமாக பணியாற்றுவது அவசியம். மேலும், பணத்தை முதலீடு செய்யும்போது செலவிடும்போதும் அதிக கவனத்துடன் இருத்தல் அவசியம்.
தனுசு ராசி:
தனுசு ராசியின் 5-வது வீட்டில் குரு சண்டாள யோகம் நுழைகிறது. இதன் விளைவாக குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். மேலும், வேலையிலும் சில தடைகள் ஏற்படும். இப்பிரச்சனைகளால் உங்களுக்கு கடுமையான உடல்நிலை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் தோல்விக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், இக்காலத்தில் கவனாக பணியாற்றுவது அவசியம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |