இந்த நிறத்தில் மணி பர்ஸ் பயன்படுத்தினால் பணம் குவிந்து கொண்டே இருக்கும்

Advertisement

Lucky Money Purse in Tamil

வணக்கம் ஆன்மிகம் நண்பர்களே.! ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே மணி பர்ஸ் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். நீங்கள் பயன்படுத்தும் மணி பர்ஸை சில விஷயங்களை மாற்றினால் பணம் சேர்த்து கொண்டே இருக்குமாம். அப்படி மணி பர்சில் என்ன மாற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து தெரிந்து கொள்வோம்.

பர்ஸ் எந்த நிலையில் பயன்படுத்த கூடாது:

பர்ஸ் எந்த நிலையில் பயன்படுத்த கூடாது

நீங்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ் ராசியானது என்று பல வருடங்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் அப்படி பயன்படுத்தும் பர்ஸ் பழைய நிலையில் இருந்தாலும் சரி, கிழிந்த நிலையில் உள்ள மணி பர்ஸையும் பயன்படுத்த கூடாது. ஏனென்றால் பணம் என்பது மகாலட்சுமியின் உருவமாக கருதப்படுகிறது.

பர்ஸ் எப்படி வாங்குவது:

 மணி பர்ஸை நீங்களே வாங்காமல் உங்களுக்கு பிடித்தவர்கள் அல்லது நீங்கள் ராசியாக நினைக்கும் நபர்களிடமிருந்து வாங்குவது சிறந்தது. மேலும் தரமான பர்ஸாக வாங்க வேண்டும். மற்றவர்கள் பர்ஸ் வாங்கி கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவர்கள் தான் பணம் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. நீங்களே அதற்கான தொகையை கொடுக்கலாம். பர்ஸை வாங்கி கொடுக்கும் போது நீங்கள் இரு கைகளால் தான் வாங்க வேண்டும். முக்கியமாக உங்களுக்கு பிடித்தமானவர் மணி பர்ஸ் வாங்கி கொடுக்கும் போது வெறும் மணி பர்ஸாக வாங்க கூடாது. அதில் குறைந்தபட்சம் 1 ரூபாயாவது வைத்து கொடுக்க வேண்டும்.  

மற்றவர்கள் பயன்படுத்திய மணி பர்ஸை வாங்கி நீங்கள் ஒருபோதும் பயன்படுத்த கூடாது. நீங்கள் பயன்படுத்திய மணி பர்ஸையும் மற்றவர்களுக்கு கொடுக்கவும் கூடாது.

பணம் வைக்கும் முறை:

பணம் வைக்கும் முறை

நீங்கள் பர்ஸில் ஒரு போதும் பணத்தை சுருட்டி வைக்க கூடாது. அதற்கு கொஞ்சம் பர்ஸை பெரியதாக வாங்கி கொள்ள வேண்டும்.

நிறம்:

Lucky Money Purse in Tamil

நீங்கள் பயன்படுத்தும்  மணி பர்ஸ் வெள்ளை நிறம் அல்லது ஊதா நிறம் பயன்படுத்துவது சிறந்தது. ஏனென்றால் வெள்ளை நிறத்திற்கும், ஊதா நிறத்திற்கும் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உள்ளது. இந்த இரண்டும் கிடைக்கிவில்லை என்றால் சிவப்பு, பச்சை, சாம்பல், பழுப்பு போன்ற நிறங்களில் வாங்கி கொள்ளலாம். ஆனால் கருப்பு நிறம் மணி பர்ஸ் மட்டும் பயன்படுத்த கூடாது.  

மணி பர்ஸை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் படி வைப்பது பிரச்சனையில்லை. ஆனால் வெளியில் இருந்து வரும் நபர்களுக்கு தெரியும் படி வைக்க கூடாது.

தேவையில்லாத பொருட்கள்:

மணி பர்ஸில் பணத்தை தவிர தேவையில்லாத பொருட்களை வைத்து கொள்ளாதீர்கள். சில நபர்கள் பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் போன்றவற்றை வைத்திருப்பார்கள். இதனுடைய தேவை முடிந்ததும் தூக்கி போட்டு விடுங்கள். வாரத்தில் ஒரு நாள் மணி பர்ஸை சுத்தம் செய்யுங்கள்.

மணி பர்ஸ் வாங்குவதற்கு உகந்த நாள்:

மணி பர்ஸை வளர்பிறை வெள்ளி கிழமை, பௌணர்மி, மூன்றாம் பிறை இந்த மூன்று நாட்களில் வாங்கினால் பணம் அதிகரித்து கொண்டே இருக்கும்.

இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள் 

 

Advertisement