மஹா சிவராத்திரி அன்று இதை மட்டும் வாங்கி பாருங்கள் அதனையுடைய பலனை உடனே பார்ப்பீர்கள்..!

Advertisement

மகா சிவராத்திரி 2024

வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வரக்கூடிய இந்த மஹா சிவராத்திரியை அனைவரும் மனதில் முழு பக்தியோடு சிவனை வழிபட்டு வருகிறீர்கள். அதுமட்டும் இல்லாமல் சிவனுக்கு மிகவும் சிறந்த நாளாக இத்தகைய மஹா சிவராத்திரி இருக்கிறது. ஆகாயல் வருகின்றன சனிக்கிழமை பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி மஹா சிவராத்திரி வரவிருக்கின்றது. அத்தகைய சிவராத்திரி அன்று நீங்கள் இந்த மூன்று பொருட்களை மட்டும் வாங்கினால் போதும் மனதில் நினைத்து காரியம் அப்படியே நிறைவேறி குடும்பம் செல்வம் செழித்து மகிழ்ச்சியாக காணப்படும். மேலும் நாம் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று பதிவை தொடர்ந்து படித்து பயேன்பெறுவோம் வாங்க..!

சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்:

கருங்காலி மாலை:

கருங்காலி மாலை

மஹா சிவராத்திரி அன்று கருங்காலி மாலை வாங்கி நாம் அணிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கருங்காலி மாலை நாம் அணியும் போது நமது குலதெய்வத்தின் முழு அருளும் குடுபத்திற்கு கிடைத்து பண வரவு மற்றும் கடன் தொல்லை நீங்கும்.

அதுமட்டும் இல்லாமல் இந்த கருங்காலி மாலை நம்முடைய மன அழுத்தம் மற்றும் உடலில் உள்ள பிரச்சனை ஆகியவற்றை சரி செய்யும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. ஆகாயல் இந்த கருங்காலி மாலையை நீங்கள் வாங்கி கோவிலில் ஒரு அர்ச்சனை செய்து விட்டு அதன் பிறகு அதனை அணிந்து கொண்டு சிவனுடைய மந்திரத்தை சொன்னால் நினைத்து நடக்கும்.

மகா சிவராத்திரி வரலாறு..!

ருத்ராட்ச மாலை:

ருத்ராட்சம் மாலை

ருத்ராட்ச மாலை என்று சொன்னாலே அதற்கு ஆன்மீகத்தில் நிறைய வகையான பலன்கள் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் மஹா சிவராத்திரி அன்று இந்த ருத்ராட்ச மாலையினை வாங்கி சிவனின் பாதத்தில் வைத்து ஒரு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு எந்த மாலையை நீங்கள் அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சம் என்றால் அது சிவபெருமானின் முழு அருள் என்று கூறப்படுகிறது. ஆகாயல் இதனை சிவராத்திரி அன்று நாம் அணிந்து கொண்டால் நமது கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நினைத்த காரியம் நிறைவேறும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

படிக மாலை:

படிக மாலை

சிவபெருமானின் ஆற்றல் நிறைந்த பொருள்களில் இந்த படிக மாலையும் ஒன்று. அத்தகைய படிக மாலையினை நீங்கள் மஹா சிவராத்திரி அன்று சிவபெருமானை மனதில் நினைத்து கொண்டு சுத்தமாக நீராடி இந்த படிக மாலையினை அணிந்து கொண்டு சிவபெருமானின் மந்திரத்தை கூறினால் போதும் மனதில் நினைத்த காரியம் விரைவில் நடக்கும்.

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் ஒன்றை மட்டும் வாங்கினால் போதுமானது.

(Mar 2024) மஹா சிவராத்திரி 2024

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement