மகேந்திர பொருத்தம் என்றால் என்ன ? | Mahendra Porutham Meaning in Tamil

Advertisement

மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா | மகேந்திர பொருத்தம் பார்ப்பது எப்படி

Mahendra Porutham Meaning in Tamil: திருமண பொருத்தம் மொத்தம் 10 உள்ளது. அவற்றில் ஒரு சில பொருத்தங்கள் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்றான மகேந்திர பொருத்தம் பற்றி இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பார்க்கலாம். மகேந்திர பொருத்தம் என்றால் என்ன மற்றும் அதை எதற்காக பார்க்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம். திருமணமாக போகும் ஆண் மற்றும் பெண்ணிற்கு இந்த பொருத்தம் மிகவும் அவசியம். ஏனென்றால் இந்த பொருத்தம் இருந்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் பெற முடியும் என்று ஐதீகம். மகேந்திர பொருத்தம் இருந்தால் மணமக்களின் தாம்பத்திய வாழ்வு சிறப்பாக  இருக்கும் என்று உறுதி அளிக்கப்படுகிறது. அதாவது பிள்ளை பேரு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மகேந்திர பொருத்தம் | Mahendra Porutham in Tamil:

  • Mahendra Porutham Meaning in Tamil: பெண்ணின் நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாக வைத்து கொண்டு எண்ணும் போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆகிய எண்களில் ஆணின் நட்சத்திரம் வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு.
  • மேலும் 2, 3, 5, 6, 8, 9, 11, 12, 14, 15, 17, 18, 19, 20, 21, 23, 24 மற்ற எண்களில் முடிந்தால் பொருத்தம் இல்லை என்று அர்த்தம்.

Mahendra Porutham in Tamil:

நட்சத்திரம் 
அசுவினி மகம்  மூலம்
பரணி பூரம் பூராடம்
கிருத்திகை உத்திரம் உத்திராடம்
ரோகினி அஸ்தம் திருவோணம்
மிருகசீரிடம் சித்திரை அவிட்டம்
திருவாதிரை ஸ்வாதி சதயம்
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
பூசம் அனுஷம் உத்திரட்டாதி
ஆயில்யம் கேட்டை ரேவதி

மகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன?

  • Mahendra Porutham Meaning in Tamil: உதாரணத்திற்கு பெண்ணின் நட்சத்திரம் அசுவினி என்றால் ஆணின் நட்சத்திரம் ரோகினி (4), புனர்பூசம் (7), மகம் (10), அஸ்தம் (13), விசாகம் (16), மூலம் (19), திருவோணம் (22), பூரட்டாதி (25) ஆக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மகேந்திர பொருத்தம் நன்றாக இருக்கும்.
முக்கிய திருமண பொருத்தம்..!

மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

  • தினப்பொருத்தம், கணப்பொருத்தம் மற்றும் மகேந்திர பொருத்தம் ஆகிய மூன்று பொருத்தங்கள் இருக்கிறது. இந்த மூன்று பொருத்தங்களில் ஏதாவது ஒரு பொருத்தம்  இருந்தாலே திருமணம் செய்யலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement