மகர ராசி ஏழரை முடிவு
வணக்கம் நண்பர்களே இன்று ஆன்மிகம் பதிவில் மகர ராசிக்கு ஏழரை சனி எப்போது முடிய போகிறது என்று பார்க்க போகிறோம். பொதுவாகவே நவகிரகங்கள் அனைத்தும் ஒவவொரு குணாதிசயங்களை கொண்டது. ஒன்பது நவகிரங்களில் எட்டு நவகிரணங்கள் ஒரு கட்டத்திலிருந்து மற்றோரு கட்டத்திற்கு செல்லும் பொழுது சனி பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் வருகிறது. சனி பகவான் மட்டும் ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஆனால் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு வரும் பொழுது எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கின்றதோ அதே அளவிற்கு கஷ்டங்களும் இருக்கும். மேலும் மகரத்திற்கு ஏழரை எப்போது முடியும் என்று நம் பதிவில் பார்க்கலாம் வாங்க…
தனுசு ராசி ஏழரை சனி முடிவு எப்போது |
மகர ராசிக்கு எப்போது ஜென்ம சனில் இருந்து விடுதலை கிடைக்கும்:
- பத்தாவது ராசியாக இருக்கும் மகர ராசி நேயர்களுக்கு செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்து வந்த சனி பகவான் எப்போது 19.12.2023 வரையும் உங்கள் ராசிக்குள் வந்து ஜென்ம சனியாக அமர்கிறார்.
- ஜென்ம சனி என்னென்ன கஷ்டங்கள் தரப்போகிறதோ என்று புலம்பல் வேண்டாம்.
- மகர ராசியின் ராசிநாதனான சனிபகவான் ராசிகுள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்வதால் அனைத்து வசதிகளையும் தருவார்.
- மகர ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகம் வந்து சேரும்.
- பிரச்சனைகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.
- எதிர் பார்த்து ஏமாந்து போன பணங்கள் எல்லாம் வந்து சேரும்.
- ஜென்ம சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் தேவை. உடல் பருமனாக வாய்ப்பு இருக்கிறது.
- எனவே எண்ணெயில் வறுத்து, பொறித்த கொழுப்பு சேர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- அதிகம் தண்ணீர் மற்றும்க் பழம், காய்கறிகளை சேர்த்து கொள்வது நல்லது.
- திடீர் பயணங்கள் வீண் அலைச்சல் போன்றவை இருக்கும்.
- வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
- உங்களின் சொந்த விஷயங்களை யாருடனும் அதிகம் பகிர்ந்து கொள்வது வேண்டாம்.
- சொத்து சமந்தா பட்ட பிரச்சனைகளில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம்.
- புது வாகனங்கள் வாங்குவதற்கும் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
- 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 2 வது வீடான கும்ப ராசிக்கு சென்று பாதாசனியாக மாறுவதால் யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
- பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- சிறுசிறு விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
சனி பகவானின் பார்வை பலன்கள்: சனி பகவான் மகர ராசில் அமர்ந்து 3, 7, 10 ஆகிய ராசிகளை பார்கிறார்.
சனிபகவான் 3-வது வீட்டை பார்ப்பதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். அது மட்டும் இல்லாமல் சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
சனிபகவான் 7-வது வீட்டை பார்ப்பதால் வீண் சந்தேகம் ஏற்படும் மற்றும் தலைவலி, கால்வலி , கழுத்துவலி ஆகியவை வந்து போகும்.
சனிபகவான் 10-வது வீட்டை பார்ப்பதால் சுயதொழில் தொடங்க வாய்ப்பு அதிகம் இருக்கின்றது, மற்றும் பணிபுரியும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள் :
- மகரத்தின் சப்தமாதிபதியான சந்திரனின் திருவோண நட்சத்திரம் 26-01-2023 வரை சனிபகவான் செல்வதால் மறைந்து திறமைகளை வெளிப்படுத்தும்.
- இதனால் வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
- விலை உயர்ந்த ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
- சுகலாபதியான செவ்வாயில் அவிட்டம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் கௌவரவ பதவிகள் உங்களை தேடி வரும்.
- வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடிற்கு செல்வதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் வாங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.
பரிகாரம் :
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனுர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோவிலுக்கு செல்வதால் பிரச்சனைகள் தீரும். சனீஸ்வரரையும் ,சிவபெருமானையும் வணங்கி வருவது நல்லது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |