ஆண்களுக்கான மச்ச பலன்கள்| Male Macha Palangal
பொதுவாக அனைவருக்குமே பிறக்கும் போதே ஒரு சில மச்சங்கள் காணப்படும். அந்த மச்சம் பார்ப்பதற்கு சிறிய புள்ளியாக இருக்கலாம் அல்லது கடுகளவில் இருக்கலாம் அல்லது மிளகளவில் இருக்கலாம் அல்லது அதைவிட பெரியதாகவும் இருக்கலாம். இந்த மச்சம் மறையாது என்பதனினால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. பொதுவாக மச்சம் என்பது ஜோதிடத்தில் அதிர்ஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாமுத்திரிகா லட்சணப்படி ஆண்களுக்கு உடம்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.
ஆணுக்கு எங்க மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?
கண்:
ஆண்களுக்கு வலது புருவத்தில் மச்சம் இருக்கிறது என்றால் அவர்களுக்கு அதிர்ஷகரமான வாழ்கை துணை அமைவர்களாம்.
வலது பொட்டில் ஆண்களுக்கு மச்சம் இருந்தால் திடீர் என்று பணம் வரவும், புகழ் செல்வாக்கு ஆகியவை கிடைக்க கூடும்.
ஆணிற்கு வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் மற்றும் உறவினர் மூலம் புகழ் கிடைக்க கூடும்.
வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக புகழ் பெற்று வாழ்வர்.
இரு கண்களில் ஏதாவது ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனை சந்திப்பார்கள்.
இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புறத்தின் ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்வு சீராக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்களுக்கு கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்..!
மூக்கு:
ஆண்களுக்கு மூக்கின் மேல் புறத்தில் மச்சம் இருக்கிறது என்றால் அவர்கள் அனைத்துவகையான சௌகரியங்களை பெறுவார்கள்.
மூக்கின் வலது புறத்தில் மச்சம் இருக்கிறது என்றால் அவர்கள் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மூக்கின் நுனி பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
உதடு:
ஆண்களின் மேல் உதட்டில் அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
காது:
வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருக்கிறது என்றால் அவர்களுக்கு தண்ணீரில் கண்டம் இருக்கும். இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருக்கிறது என்றால் அவர்கள் பெண்கள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரண்டு காதுகளிலும் மச்சம் இருக்கிறது என்றால் அவர் மிகவும் அதிர்ஷ்டாகரமான ஒருவர் ஆவார்.
கன்னம்:
ஆணிற்கு வலது பக்க கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் மற்றவர்களை எளிதாக வசீகரம் செய்துவிடுவார் .
கழுத்து:
ஆண்களுக்கு தொண்டை பகுதில் மச்சம் இருக்கிறது என்றால் அவர்களது திருமணத்தின் மூலம் சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. கழுத்தின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
மார்பு:
ஆண்களுக்கு வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். இடது மார்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும்.
வயிறு:
வயிற்றின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் நல்ல குணத்தையும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
முதுகு:
வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காலில் மச்சம் இருந்தால் என்ன பலன்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |