மரண யோகம் பரிகாரம் | Marana Yogam Enral Enna
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம் பதிவின் பணிவான வணக்கம்… இந்த பதிவில் மரண யோகம் என்றால் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உலகத்தில் பிறந்த அனைவருமே நெடுநாள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புவார்கள். மரண யோகத்தில் எது மாதிரியான காரியங்கள் செய்யக்கூடாது என்று படித்தறிவோம் வாங்க..
இன்றைய நாள் எப்படி |
மரண யோகம் என்றால் என்ன:
மரணம் என்றாலே நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். மரணம் என்பது இறப்பு, சாவு போன்றவற்றை குறிக்கும். யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று அர்த்தம். இந்த இரண்டினையும் சேர்த்தால் மரண யோகம் என்று பொருள் தருகிறது.
மரண யோகம் என்பது மரண யோகத்துடன் சில நட்சத்திரங்கள் சேர்ந்து வரும்போது அது ஒவ்வாத நாளாக மாறிவிடுகிறது. அப்படி என்ன நட்சத்திரங்கள் எந்த கிழமையுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
- ஞாயிற்றுக்கிழமை: அவிட்டம், கார்த்திகை
- திங்கட்கிழமை: அஸ்விணி, உத்திராடம்
- செவ்வாய்க் கிழமை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
- புதன் கிழமை: ஹஸ்தம்
- வியாழக்கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை
- வெள்ளிக்கிழமை: ரொகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்
- சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்
மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த விண்மீன்கள் சேர்ந்து வந்தால் அன்று மரண யோகம்.
மரண யோகம் என்று வீட்டில் எந்த சுப காரியமும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அன்றைய நாளில் செய்யும் எந்த காரியமும் வளர்ச்சி அடையாது.
மரண யோகம் என்பது மரணத்தைக் குறிப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அன்றைய நாள் செய்யும் எந்த செயலும் முழுமை அடையாது. அதனால் தான் அன்றைய நாள் நல்ல செயல்களை தொடங்க மாட்டார்கள்.
ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்வோம் |
மரண யோகத்தில் தவிர்க்கக்கூடியவை:
- மரண யோகமன்று நீங்கள் புதிதாக ஒரு இடம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். மரண யோகம் அன்று வாங்கிய அந்த நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம் மாட்டிக் கொண்டுவிடும்.
- மரண யோகத்தில் புதிதாக ஒருவர் வியாபாரத்தைத் தொடங்கினால், அது செழிப்படையாது.
- பல நாள் திருமணம் ஆகாதவர்கள் மரண யோகத்தில் திருமணம் செய்தால் அவர்களுடைய திருமண வாழ்க்கையானது பிரிவில் முடிந்துவிடலாம்.
- பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
- மரண யோக தினத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மீறி கடன் கொடுத்தால் கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும்.
- அதனால் மரண யோக நாளில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்கவும்.
மரண யோகத்தில் என்ன செய்யலாம்:
மற்றவர்களிடம் வாங்கிய கடன் தொகையை மரண யோக நாளில் திருப்பி கொடுக்கலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது. இது போல பிரச்சனை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்றைய தினத்தில் செய்யலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |