செவ்வாய், சுக்கிரன் மிதுனத்தில் இணைவதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது..! அள்ளிக்கொள்ள தயாராகுங்கள்..!

mars conjunct venus in gemini is lucky for these signs in tamil

மிதுனத்தில் இணையும் செவ்வாய் சுக்கிரன்

வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இருக்கிறதா..? உடனே இதென்ன கேள்வி என்று கேட்பீர்கள். பொதுவாக நாம் வாழும் இந்த நவீன உலகில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களை பார்ப்பதே அதிசயமாக இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கிறது. ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கிரகங்கள் அனைத்தும் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயர்கின்றன. அப்படி இடம் பெயரும் சில ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். சில ராசிக்கு கஷ்டத்தை கொடுக்கும். அதுபோல செவ்வாய் மற்றும் சுக்கிரன் மிதுனத்தில் இணைவதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம் வாங்க..!

வைகாசி மாதத்தில் சூரியனின் அருள் இந்த ராசிகளுக்கு மட்டும் தான்.. அதிர்ஷ்ட மழையில் நனைய தயாராகுங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்..?

துலாம்:

செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைவதால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு வேலையில் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்க போகிறது. வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.

ரிஷபம்:

செவ்வாய், சுக்கிரன் ரிஷப ராசிக்காரர்களின் 2 ஆம் வீட்டில் இணைகிறார்கள். அதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைக்க போகிறது. இந்த நேரத்தில் உங்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நினைத்து பார்க்காத அளவிற்கு பணவரவு கிடைக்கும் நேரம் இது.

குருவால் உருவாகும் ஹம்ச ராஜயோகம்.. இந்த ராசிக்காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 10 ஆம் வீட்டிலும் செவ்வாய் 8 ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். இதனால் கன்னி ராசியில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நேரம் இது தான். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் பொன்னான காலமாக இருக்கும். அதிக லாபம் கிடைக்க போகிறது. வேலை தேடிக் கொண்டிருக்கும் கன்னி ராசிகாரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப்போகிறது.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களின் 3 ஆம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை நிகழப்போகிறது. அதனால் புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் அதிர்ஷ்டமான நேரம் இது. உங்களின் திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கப்போகிறது. நீங்கள் தொடங்கிய அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்பாராத சொத்துக்கள் கைக்கு கிடைக்கப்போகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்