Mayil Kanavil Vanthal Enna Nadakum
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவின் மூலம் மயில் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்க போகிறோம்..! ஆமா நாம் காணும் கனவுகளில் அனைத்தும் நியாபகம் இருப்பதில்லை. அப்படியே நியாபகம் இருந்தாலும், அந்தளவிற்கு சரியாக நியாபகம் இருப்பதில்லை. இது எப்படி வருகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் கனவு ஏன் சீக்கிரம் மறந்து போகிறது தெரியுமா..?
நாம் காணும் கனவுகளில் ஒரு சக்தி உள்ளது. அது நிஜ வாழ்க்கையில் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் நம்முடைய வாழ்க்கைக்கும் கனவிற்கு தொடர்பு உண்டு. அப்படி நாம் கனவுகளில் மயிலை காண்டால் என்ன பலன் என்று பார்க்கலாம் வாங்க..!
மயில் கனவில் வந்தால் என்ன பலன்:
♦ பொதுவாக பறவைகளை கனவில் கண்டால் நீங்கள் இருக்கும் சூழ்நிலை மாறப்போகிறது என்று அர்த்தம்.
♦ மயிலை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகளும், சாதகமான சூழ்நிலைகளும் உண்டாகும் என்பதை குறிக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 அதிர்ஷ்டம் தரும் கனவுகள் எது தெரியுமா
மயில் தோகை கனவில் வந்தால் என்ன பலன்:
♦ மயில்தோகையை கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் உங்களை தேடி வரும்.
♦ மயில் பறந்து செல்வது போல் கனவு கண்டால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.
♦ மயில் கூவுவது போல் கனவு கண்டால் கணவன் மனைவிக்கு இடையில் அன்பு உண்டாகும்.
♦ மயில் சண்டையிடுவது போல் கனவு கண்டால் பின்னால் வரவிற்கும் சண்டையை குறிக்கும்.
♦ ஜோடியாக மயிலை கனவில் கண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
மயில் ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
ஆடும் மயிலை நீங்கள் கனவில் கண்டால், உங்களுடைய எதிர்காலம் பற்றிய திட்டத்தை திட்டமிட்டு நகர்த்த வேண்டும் என்பதை குறிக்கிறது. அதுமட்டுமில்லாமல், நீங்கள் ஒரு காரியத்தை முடிக்க நினைக்கும் நிலையில் இருக்கும் போது உங்களுக்கு மயில் ஆடுவது போல் கனவு வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பதை உணர்த்துகிறது. மங்களகரமானதாக கருதப்படுகிறது.
வெள்ளை மயில் கனவில் வந்தால் என்ன பலன்:
வெள்ளை மயிலை கனவில் கண்டால் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் ஆகப்போகிறது என்று அர்த்தம். அதேபோல் நிதி நிலை நன்றாக இருக்கும். உறவில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற கனவு பலன்கள் 👉👉 கனவு பலன்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |