நீங்கள் மனதில் நினைத்துள்ள அனைத்து காரியங்களும் உடனடியாக நடப்பதற்கு இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

Advertisement

Ninaithathu Nadakka

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு எண்ணம் அல்லது ஆசை கண்டிப்பாக இருக்கும். அதாவது ஒரு சிலருக்கு நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும். ஒரு சிலருக்கு நமது உடல் ஆரோக்கியம் இன்று போல் என்றும் நன்றாக இருக்க வேண்டும். மேலும் ஒரு சிலருக்கு தானும் தனது குடும்பமும் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் போன்ற பல வகையான எண்ணங்களும் ஆசைகளும் இருக்கும். இவ்வாறு நமது மனதில் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி கொள்வதற்காக நாம் கடினமாக உழைப்போம். ஆனாலும் எந்த பலனும் இருக்காது. அதனால் தான் ஆன்மிகத்தில் சில வழிமுறைகளை செய்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இன்றைய பதிவில் நீங்கள் நினைத்தது விரைவில் நடப்பதற்கு உதவும் ஒரு பரிகாரத்தை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து நீங்கள் மனதில் நினைத்துள்ள காரியங்களை நிறைவேற்றி கொள்ளுங்கள்.

உங்களுக்கு உள்ள எவ்வளவு பெரிய பணக்கஷ்டத்தையும் போக்கி பணமழையில் நனைய வைக்க இந்த ஒரு வேர் மட்டும் போதும்

மனதில் நினைத்தது நிறைவேற:

உங்கள் மனதில் நினைத்து வைத்துள்ள அனைத்து விஷயங்களும் நிறைவேறுவதற்கு உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காண இருக்கின்றோம்.

முதலில் இந்த பரிகாரம் செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. வெற்றிலை – 2
  2. ஏலக்காய் – 3
  3. கிராம்பு – 3 

பரிகாரம் செய்யும் முறை:

manathil ninaithathu nadakka

முதலில் நாம் எடுக்க போகும் வெற்றிலையின் நுனிப்பகுதி நன்கு கூர்மையாக இருக்க வேண்டும். அதே போல் நாம் எடுத்துள்ள வெற்றிலையின் காம்பினை பிரித்து எடுத்து விடவே கூடாது.

இப்பொழுது இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் நாம் எடுத்து வைத்துள்ள வெற்றிலையை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதனின் பின்புறத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 3 ஏலக்காய் மற்றும் 3 கிராம்பு ஆகியவற்றை வைத்து நன்கு மடித்து கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:

பின்னர் இதனை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து நன்கு பூஜை செய்யுங்கள். அதன் பிறகு இதனை உங்களின் கண்பார்வை அதிகமாகப்படும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் இதனை உங்களின் பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக்கில் வைத்து கொள்ளுங்கள்.

இந்த வெற்றிலை, ஏலக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றை தினமும் மாற்றி கொள்ள வேண்டும். அதே போல் இந்த பரிகாரத்தை தினமும் காலை 6.00 மணி மேல் 7.00 மணிக்குள் செய்து கொள்ளுங்கள்.

வீட்டில் எண்ணி வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் வர வேண்டுமா அப்போ இதை செய்ய மறக்காதீர்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement