வீட்டிற்குள் வரக்கூடாத உயிரினம்
வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! இன்றைய பதிவில் எந்த உயிரினம் வீட்டிற்கு வரக்கூடாது ஒருவேளை அந்த உயிரினம் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். நம்முடைய வீட்டில் பொதுவாக ஏராளமான உயிரினங்கள் வந்து வந்து செல்லும். அதில் நமக்கு ஒரு சில உயிரினங்கள் வந்தால் வீட்டில் எதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பயமாக இருக்கும். அதனை நினைத்து சிலர் கவலை பட்டு கொண்டிருப்பார்கள். உங்களின் கவலையை போக்குவதற்கு இன்றைய பதிவை படித்து எந்தெந்த உயிரினங்கள் வரக்கூடாது என்பதை தெரிந்துகொண்டு பயன்பெறலாம் வாங்க.!
இதையும் படியுங்கள்⇒ எறும்பு வீட்டுக்குள் வந்தால் என்ன ஆகும் தெரியுமா? | எறும்பு வருவதன் உண்மையான காரணம் பற்றி தெரிந்துகொள்ளலாம்..!
புறா வீட்டிற்கு வந்தால் என்ன பலன்:
பொதுவாக புறா பழைய கட்டிடங்கள் மற்றும் கோவில்களில் அதிகமாக வளர்ந்து வருகின்றன. அத்தகைய புறாவை சிலர் வீட்டிலும் வளர்த்து வருகின்றனர். ஆனால் புறாவை உங்களுடைய வீட்டில் வளர்த்தலோ அல்லது புறா உங்கள் வீட்டிற்கு வந்தாலோ அது உங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் பலனாக இருக்கிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
குளவி வீட்டிற்கு வந்தால் என்ன பலன்:
குளவி எல்லோருடைய வீட்டிலும் கட்டாயமாக கூடு கட்டி அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உயிரினம். ஆனால் ஆன்மீகத்தில் குளவி அல்லது தேனீ போன்ற உயிரினங்கள் வீட்டிற்கு வரும் போது அது உங்களுக்கு எதிர்மறையான சக்தியை கொண்டு வரும் பலன் என்று கூறப்படுகிறது.
வெளவால் வீட்டுக்குள் வந்தால்:
வெளவால் ஒரு பாலூட்டி உயிரினம் ஆகும். இந்த வெளவால் பகல் நேரங்களில் அதிகமாக வெளிவராது இரவு நேரங்களில் மட்டுமே அது அதிகமாக வெளியில் வரும்.
அத்தகைய வெளவால் உங்களுடைய வீட்டிற்கு வரும் போது பொருளாதார இழப்பு மற்றும் உடல் நலக்குறைவு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் பலனாக இருக்கிறது என்று சாஸ்திரத்தில் சொல்கிறார்கள்.
ஆந்தை வீட்டிற்கு வந்தால் என்ன பலன்:
ஆந்தைக்கு இயல்பாகவே பகலில் கண் தெரியாது. இத்தகைய ஆந்தை நம்முடைய வீட்டிற்கு வந்து சிறிது நேரம் அமர்ந்தால் அபச குணமாக கருதப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் நமக்கு ஏதோ ஒரு வகையில் பிரச்சனை வரப்போவதை உணர்த்தும் பலனாக இருக்கிறது.
கருப்பு பூனை வீட்டிற்கு வந்தால்:
பூனை ஒரு சிலர் வீட்டில் செல்ல பிராணியாகவும் இருக்கிறது. அத்தகைய பூனைகளில் கருப்பு பூனையும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த கருப்பு நம்முடைய வீட்டிற்குள் வந்தாலோ அல்லது வீட்டிற்கு பக்கத்தில் அமர்ந்தாலோ அது உங்களுடைய வீட்டிற்கு நல்ல பலனாக இல்லை என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |