ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள்..! padiga malai payangal..! padiga malai in tamil..!
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..!
இன்றைய பொதுநலம் பதிவில் ஒரு முக்கியமான விஷயத்தை அனைவரும் தெரிந்துக்கொள்ள போகிறோம். அது என்னவென்றால் ஸ்படிக மாலை(Padiga Malai) அணிவதால் வரும் நன்மைகளை பற்றி இன்னக்கி நாம் தெரிந்துக்கொள்ளுவோம் நண்பர்களே வாங்க..!
Sphatik Mala Benefits in Tamil..!
ஸ்படிகம் உருவான விதம் / padiga malai in tamil:
அதில் முதல் தரம் ஸ்படிகம் என்பது மிகவும் தெய்வீக சக்தி கொண்ட ஸ்படிக மாலை(padiga kal) ஆகும். ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இந்த ஸ்படிகம் சிறப்பு வாய்ந்தவை. ஸ்படிகத்தில் சிவலிங்கம், நந்தி, விநாயகர் போன்ற சிலைகள் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது.
இவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு அதன் ஈர்ப்பு சக்தியால் பல நன்மைகள் கிடைக்கும். வெறும் தண்ணீரால் அபிஷேகம் செய்தாலே போதும். இறைவனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். இந்த ஸ்படிகத்தை மாலையாக எப்படி கோர்க்கலாம்..? இதை யாரெல்லாம் அணியலாம் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். ஒலை
ஸ்படிகம் மாலை எப்படி செய்வது / padiga malai in tamil:
இந்த ஸ்படிக மணி(padiga mani) மாலையை எந்த ஒரு உலோகத்தினோடும்(metals) சேர்த்து ஸ்படிக மணியை கோர்க்க கூடாது. அதுமட்டுமில்லாமல் ருத்ராட்சம் உள்ளிட்டவையும் சேர்த்தல் கூடாது. தங்கம்(gold) மற்றும் வெள்ளியால்(silver) மட்டுமே இந்த ஸ்படிக மணியை(padiga mani) அணிய வேண்டும்.
ஸ்படிக மாலையை யாரெல்லாம் அணியலாம் / padiga malai in tamil:
ஸ்படிக மாலையை (padiga malai) குளிர் பிரதேசங்களில் உள்ளவர்கள் மற்றும் குளிர்ச்சி தன்மை கொண்டவர்கள் கண்டிப்பாக இந்த ஸ்படிகம் அணிவதை தவிர்த்தல் மிகவும் நல்லது. இவர்களை தவற சிறிய குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் கூட அணியலாம்.
அதுமட்டுமில்லாமல் குறிப்பாக அதிகமாக கோபப்படும் நபர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடலில் அதிகமான உஷ்ணம் உள்ளவர்கள் இதை கட்டாயம் அணிந்தால் உடலுக்கு நல்ல பலன் கண்டிப்பா கிடைக்கும்.
ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் பயன்கள் / padiga malai payangal:
ஸ்படிக மாலையை அணிவதால் எப்போதும் தெய்வ அருள் கிடைக்கும். அதன் அதிர்வலைகள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பதால் நல்ல எண்ணங்களை தூண்ட செய்யும். நம் மனதை எப்போதும் அமைதியாக வைத்திருக்க உதவும்.
தெளிவான சிந்தனையை தரக்கூடியவை, தன்னம்பிக்கையை அதிகரிக்கும், அதோடு உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். அதுமட்டும்மில்லாமல் நம்மிடம் எப்போதும் எந்த வித தீய சக்திகளையும் நெருங்க விடாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
ஸ்படிக மாலையை தரம் பார்த்து கண்டுபிடிப்பது எப்படி / padiga malai:
முதல் தரம் வாய்ந்த ஸ்படிகத்தை தொட்டவுடன் நல்ல குளிர்ச்சியை வெளிபடுத்தும். ஸ்படிகத்தை நீரில் போட்டால் கண்களுக்கு புலப்படாது. தண்ணீரோடு ஒன்றிருக்கும் தன்மை கொண்டது இந்த ஸ்படிக மாலை. அதனால் இப்படி தரம் பார்த்து ஸ்படிக மாலையை வாங்கி அனைவரும் பயன்படுத்துங்கள்.
ஸ்படிக மாலை அணியும் விதிமுறை / padiga malai payangal:
ஸ்படிக மாலை (padiga malai) அணிந்து கொள்வதற்கு முன் குறைந்தது 3 மணி நேரம் வரை நல்ல தண்ணீரில் போட்டு விடவேண்டும். 3 மணி நேரம் பிறகு எடுத்து பயன்படுத்தலாம். முக்கியமாக வேற யாரும் பயன்படுத்தினால் கூட இது மாறி செய்ய வேண்டும். குளிக்கும் போதும் கட்டாயம் போட்டு கொண்டே குளிக்க வேண்டும். இரவில் உறங்கும் போது கட்டாயம் அவிழ்து தரையில் வைக்க வேண்டும்.
காலையில் நீங்கள் அணியும் போது மாலை குளிர்ச்சியாக இருக்கும். நாள் முழுவதும் உங்களது உடல் உஷ்ணத்தை இந்த ஸ்படிகம் ஈர்த்து கொண்டிருக்கும். இரவில் நீங்கள் கழற்றி வைக்கும் போது மாலை உஷ்ணமாகி விடும். தரையில் வைப்பதால் பூமியின் ஈர்ப்பு சக்தி பெற்று மீண்டும் குளிர்ந்த நிலைக்கு செல்லும்.
ஸ்படிக ஜப மாலை பயன்கள் / padiga malai payangal:
ஸ்படிக மாலையை ஜப மாலையாக உபயோகிக்கும் போது அதற்கென்று தனியாக வைத்து கொள்வது மிகவும் நல்லது. அப்படி இல்லையென்றால் அணியும் மாலையை கூட பயன்படுத்தலாம்.
இறைவனின் நாமத்தை உச்சரித்து ஸ்படிக மாலையை உருட்டும் போது மனதில் உள்ள அனைத்து எதிர்மறை எண்ணங்களும் விலகி ஓடும். இந்த ஸ்படிக மாலை அணிவதால் மனதில் உள்ள பாரம், மன அழுத்தம் குறைந்து உடலை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும்.
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |