பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன்? | Pambu Kuruke Vanthal

Advertisement

பாம்பு வந்தால் என்ன பலன்? | Pambu Vanthal Enna Nadakum

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். சகுனம் பார்க்கும் வழக்கம் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. சகுனம் என்பது பஞ்ச பூதங்கள் முதல் ஐந்து அறிவு ஜீவன்கள் வரை இயற்கையின் ஆதாரமாய் விளங்கும் உயிரினங்களின் அசைவை பொறுத்து நல்லது, கெட்டதை தீர்மானிப்பது ஆகும். சகுனங்கள் என்னவாக இருந்தாலும் சென்ற காரியத்தில் வெற்றி கிடைத்தால் அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை, ஆனால் அதுவே ஒரு கெட்டது நடக்கும் போது தான் சகுனம் பற்றியே பெரும்பாலான மக்கள் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். எப்படி பூனை குறுக்கே வந்தால் ஒரு பலன் இருக்கிறதோ அதே போன்று பாம்பு குறுக்கே வந்தாலும் ஒரு பலன் இருக்கிறது. நாம் இந்த தொகுப்பில் பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன் என்பதை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன்?

பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன்

 • நீங்கள் வெளியில் செல்லும் போது நல்ல பாம்பு வலமிருந்து, இடது புறத்தில் சென்றால் நல்லது நடக்கும். வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
 • இடது புறத்தில் இருந்து வலது புறத்திற்கு நல்ல பாம்பு சென்றால் தீமை நடக்கும்.
 • பாம்பு நேராக வந்தால் சென்ற காரியத்தில் வெற்றி கிடைக்கும், அதுவே நல்ல பாம்பு புரண்டுபடுத்தால் செல்லும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
 • ஊருக்குள் பாம்பு நுழைந்தால் நல்லது நடக்கும், வெளியே சென்றால் தீமைகள் நடக்கும். பாம்பின் ஓசையை வலப்புறம் இருந்து கேட்டால் மிகவும் நல்லது, இடப்புறம் இருந்து கேட்டால் கெட்டது.
 • பாம்பு குறுக்கே சென்றால் எதிர்பார்த்த சில பலன்கள் காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
வெள்ளிக்கிழமை பாம்பு பார்த்தால்

பாம்பு பார்ப்பது நல்லதா? கெட்டதா?

 • நாம் அன்றாட வாழ்க்கையில் நாய், பூனையை பார்ப்பதை போல எப்போதாவது பாம்புகளையும் பார்ப்பது உண்டு. நீங்கள் ஒரு காரியத்திற்காக வெளியே செல்லும் போது நல்ல பாம்பை பார்ப்பது நல்லது, மேலும் நல்ல பாம்பு தெய்வத்திற்கு சமமாக போற்றப்படுகிறது.
 • வெளியில் செல்லும் போது பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி கொண்டிருக்கும் போது பார்த்தால் அது கெட்ட சகுனம் ஆகும். மேலும் நீங்கள் செல்லும் காரியம் தோல்வியில் முடியலாம். நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
 • ஆண் பாம்பு மற்றும் பெண் பாம்பு பின்னி கொண்டிருக்கும் போது பார்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும், இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் எந்த வேலைக்காக வெளியில் செல்கிறீர்களோ அதில் வெற்றி கிடைக்கும்.
 • அளவில் பெரிய பாம்பு, சிறிய பாம்பை விழுங்குவது போல் பார்ப்பது நல்லது அல்ல. இதனால் உங்களுக்கு தீமை நடக்கலாம்.
 • பச்சை மரத்தில் பாம்பு ஏறுவது போல பார்த்தால் பதவி உயர்வு கிடைக்கும், நல்ல காரியங்கள் நடக்கும்.
 • பாம்பு மரத்தில் இருந்து இறங்குவது போல பார்த்தால் கெட்ட சகுனம், காரியங்கள் நடந்து முடிவது சற்று கடினமாக இருக்கும்.
 • இரண்டு பாம்புகள் ஒரே திசையில் செல்வதை போல பார்த்தால் காரியத்தடை ஏற்படும், வறுமை அதிகரிக்கும்.

வீட்டிற்குள் பாம்பு வந்தால் என்ன பலன்?

 • வீட்டிற்குள் பாம்பு நுழைவதை பார்த்தால் பொருள் சேர்க்கை அதிகரிக்கும், இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
 • பாம்பு வீட்டில் இருந்து வெளியே வருவதை பார்த்தால் வறுமை மற்றும் இல்லத்தில் அமைதி குறையும்.
கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement