பாம்பு பார்ப்பது நல்லதா? கெட்டதா?
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம் பொதுவாக நம் முன்னோர்கள் வெளியில் செல்லும் வேலை முடிந்தால் அதனை பற்றி எதுவும் பேசுவது இல்லை. அதே நேரத்தில் போகும் வேலை முடியவில்லை என்றால்? இன்று நான் எழுந்ததும் கண் முழித்த முகம் சரி இல்லை என்றும், நான் செல்லும் நேரத்தில் அவர்கள் வந்தார்கள் அதனால் தான் நான் போகும் வேலை முடியவில்லை என்றும் சொல்வார்கள். அதே போல் வெளியில் செல்லும் நேரத்தில் பூனை பார்த்தாலோ, அல்லது வெள்ளி கிழமை நாகத்தை பார்த்தாலோ அதை நினைத்து மனதில் சிறு குழப்பத்துடன் அந்த நாட்கள் முழுவதும் யோசிப்பார்கள், அப்படி வெள்ளிக்கிழமை பாம்பு பார்த்தால் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாங்க.
வெள்ளிக்கிழமை பாம்பு பார்த்தால்:
- பாம்பு பார்த்தால் படையே நடுங்கும். பாம்பு சாதாரண உயிரினம். ஆனால் அது கடித்தால் விஷம் என்பதால் அதனை பார்த்தால் அனைவரும் அச்சம் கொள்கிறார்கள்.

- ஆனால் ஒரு சிலர் கண்களில் பாம்பு அடிக்கடி தென்படும். அப்படி வெள்ளிக்கிழமை அடிக்கடி பாம்பை கண்டால் கால சர்ப்ப தோஷம் இருக்கிறதா என்பதை ஜாதகத்தில் பார்க்க வேண்டியது அவசியம்.
- சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு பாம்புகளால் அடிக்கடி பிரச்சனைகள் வரும், கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும்.
- அதுமட்டுமில்லாமல் திருமணம் தடைப்படும், குழந்தை பாக்கியம் பெறும் வாய்ப்புகள் தள்ளி போகும்.
- அடிக்கடி பாம்பு பார்த்தால் உடனே ஜாதகத்தை பார்த்து கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் இருப்பவர்கள் ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்து வந்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

- அதிகளவு அடிக்கடி நாகத்தை பார்ப்பவர்களுக்கு கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் சில கோவில்களில் மரத்தடியில் நாகத்தை வைத்து வழிபடுபவர்களை பார்த்திருப்போம், அந்த கோவிலுக்கு சென்று அந்த நாகத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டு வர நாகத்தால் உள்ள தோஷத்தையும் குறைக்கலாம் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும்.
- உங்களால் முடிந்தவரையில் கோவில்களுக்கு சென்று அடிக்கடி உங்கள் கைகளால் குங்குமம் மற்றும் மஞ்சள் அர்ச்சனை செய்யலாம். அப்படி செய்து வந்தால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை, திருமண தடை, குழந்தை பாக்கியம், வேலையின்மை போன்ற பிரச்சனைகளிருந்து விடுபடலாம். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி உங்கள் கண்களில் பாம்புகள் வராது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |