பணக்கஷ்டம் நீங்க இந்த பொருட்கள் எல்லாம் எப்போதும் குறையாமல் இருக்க வேண்டும்..!

Pana kastam neenga

Pana kastam neenga

பணக்கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனை தான். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே குழந்தைகளின் படிப்பு செலவு, மருத்துவ செலவு மற்றும் திருமண செலவு என்று ஏதாவது ஒரு தேவைக்காக கடன் வாங்குகிறார்கள். பின் சம்பாதிக்கும் பணம் கடன் அடைக்கவே சரியாக இருக்கிறது என்று பலரும் புலம்புகிறார்கள். அதுபோல கடன் பிரச்சனையை சரி செய்ய வேண்டும், பணக்கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்களை செய்கின்றார்கள். பரிகாரங்கள் செய்தும் பலன் கிடைக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பணம் மலை போல் குவிய ஏலக்காயை இப்படி வைத்து பாருங்கள்..!

பணக்கஷ்டம் நீங்க என்ன செய்வது: 

உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் காணாமல் போவதற்கு பரிகாரம் செய்ய தேவையில்லை.  உங்கள் வீட்டில் இருக்கும் இந்த பொருட்கள் குறையாமல் எப்பொழுதும் நிரம்பி இருக்க வேண்டும். இப்படி இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனை காணாமல் போய்விடும்.  

அஞ்சறைப் பெட்டி: 

அஞ்சறைப் பெட்டி

அஞ்சறை பெட்டி அனைவரின் வீட்டு சமையலறையிலும் கட்டாயம் இருக்கும். அஞ்சறைப் பெட்டி இல்லாத வீடுகளே இருக்க முடியாது. அதுபோல அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் எப்பொழுதும் குறையாமல் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் அனைத்தும் நீங்கிவிடும்.

இதையும் செய்து பாருங்கள் ⇒ வீட்டில் பணவரவு பலமடங்கு அதிகரிக்க இதை மட்டும் செய்தால் போதும்..!

ஊறுகாய்: 

ஊறுகாய்

ஊறுகாய் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஓன்று. இந்த ஊறுகாய் எப்பொழுதும் குறையாமல் இருக்க வேண்டும். காரணம் ஊறுகாய் நிறைந்து இருக்கும் இடத்தில் குபேர பார்வை இருக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. குபேரருக்கு மிகவும் பிடித்த பொருள் ஊறுகாய்.

அதனால் ஊறுகாய் எப்பொழுதும் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள். ஊறுகாய் எப்படி குறையாமல் இருக்கிறதோ அதேபோல் உங்கள் வீட்டில் செல்வவளமும் குறையாமல் இருக்கும்.

அரிசி அளக்கும் படி: 

அரிசி அளக்கும் படி

அனைவரின் வீட்டிலும் அரிசி, உளுந்து போன்றவற்றை அளப்பதற்கு படி என்ற ஆழாக்கு பயன்படுத்துவார்கள். அதுபோல அரிசி வாங்கும் போது அதை மூட்டையில் வைத்து பயன்படுத்த கூடாது. வாங்கி வந்த அரிசியை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் படியை வைத்து, படி முழுவதும் அரிசி நிரம்பி இருக்க வேண்டும். இதுபோல அரிசி குறையாமல் இருந்தால் உங்கள் வீட்டில் பணமும் குறையாமல் இருக்கும்.

கல் உப்பு: 

கல் உப்பு

கல் உப்பு எப்பொழுதும் குறையாமல் நிரம்பி இருக்க வேண்டும். கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் கல் உப்பு குறையாமல் இருக்க வேண்டும். கல் உப்பு குறையாமல் இருந்தால் உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் வராது. கடன் தொல்லை அனைத்தும் காணாமல் போய்விடும்.

இதையும் செய்து பாருங்கள் ⇒ வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் பணவரவும், அதிர்ஷ்டமும் அதிகரிக்குமாம்..!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்