வீட்டில் பணம் சேர இந்த 5 விஷயத்தை மட்டும் செய்யுங்கள்…!

Advertisement

பணம் சேர என்ன செய்ய வேண்டும்

அனைவரின் அன்றாட தேவையை பூர்த்தி செய்வது பணம் தான். இந்த பணமானது சாதாரணமாக அனைவருக்கும் கிடைக்கவில்லை அவர் அவர் உழைப்புக்கு கிடைக்கும் பரிசு, ஆனால்  சில விஷயத்தை செய்வதால் நாம் சம்பாதிக்கும் பணமானது. தேவையில்லாத வழியில் தான் செலவுகள் ஆகும்.

நாம் செய்யும் சில விஷயங்கள் சாஸ்திர சம்பரதாயங்களை கொண்டு அமைத்துள்ளது. ஆகையால் வீட்டில் இந்த விஷயத்தை செய்யுங்கள் உங்கள் வீட்டில் பணம் சேரும்.

Panam Sera Tips Tamil:

டிப்ஸ்: 1

அனைவரின் வீட்டிலும் பெருமாளை வழிபடுவது வழக்கம், பெருமாளின் மனதில் லட்சுமி தேவி இருக்கிறார் என்பதால் அவர்களை வழிபடுவது நல்லது முக்கியமாக புதன் மற்றும் சனி கிழமைகளில் வழிபடுவது நல்லது பணம் சேரும்.

டிப்ஸ்: 2

அனைவரும் சமையலுக்கு பயன்படுத்தபடும் பொருள் உப்பு. இந்த உப்பானது லட்சுமி தேவியை அம்சம் ஆகும். ஆகையால் வீட்டில் மளிகை பொருட்கள் குறைத்தாலும் உப்பு குறையாமல் நிறைந்தே இருக்க வேண்டும். மேலும் சமைக்கும் போது உப்பு கீழ் சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

செல்வ வளம் பெருக அரிசி பானையில் இந்த பொருளை மட்டும் வையுங்கள்..!

டிப்ஸ்: 3

வீட்டை நல்ல நறுமணத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையாகவே நறுமணம் நிறைந்த வீட்டில் மகாலட்சுமி குடிபெயர்வால் என்று சொல்வார்கள். ஆகையால் வீட்டை மலர்கள் மூலமாகவோ அல்லது சாம்பிராணி, ஊதுவத்தி மூலமாகவோ நறுமணத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

டிப்ஸ்: 4

நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களை மரியாதையாகவும், அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுடைய ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும், அதோடு மகாலட்சிமியின் மனம் நிறைந்து வீட்டில் செல்வ செழிப்பாக இருப்பீர்கள்.

இதை செய்து பாருங்கள் 👉👉 உங்கள் பூஜை அறையில் இதை மட்டும் செய்தால் போதும் செல்வம் பெருகும்..!

டிப்ஸ்: 5

நாம் பேசுவதாக இருந்தாலும் சரி செய்வதாக இருந்தாலும் சரி அது நேர்மறை ஆற்றலாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் செய்யும் ஒவ்வொன்றிற்கும் ஒரு சக்தி இருக்கும் ஆகையால் முடிந்தளவு நல்லதை மட்டுமே செய்யுங்கள். பேசுங்கள். அப்போது தான் நமக்கும் சரி வீட்டில் பணம் சேரும், மகிழ்ச்சியிக்கும் குறைவு இருக்காது.

மேலும் தன்னுடைய விஷயத்திற்காக எப்போதும் போய் சொல்வது, அடுத்தவர்களை மாட்டி விடுவதும் வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்கி மகாலட்சுமியை வீட்டை விட்டு வெளியில் அனுப்பும். நிம்மதியும் இருக்காது.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement