பன்றி கனவில் வந்தால் என்ன பலன்கள்..!

Advertisement

பன்றி கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா? | Pandri Kanavu Palan in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பன்றி கனவில் வந்தால் என்ன பலன்கள் என்பதை ( pandri kanavu palangal in tamil) பின்வருமாறு விவரித்துள்ளோம். நண்பர்களுக்கு வணக்கம்.. நாம் காணும் கனவுகளில் மலர்கள், செடிகள், உறவினர்கள், நண்பர்கள், அன்பானவர்கள், விளங்கிகள், பறவைகள் இதுபோன்று நிறைய விஷயங்கள் வருவதுண்டு. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது நமது கனவில் பன்றி வந்தால் என்ன பலன், பன்றி கனவில் வருவது நல்லதா? கெட்டதா? என்பதை பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

நம்மில் பலருக்கும் கனவில் பன்றி வந்திருக்கும். பொதுவாக சாலையில் பன்றியை பார்த்தாலே நமக்கு ஒரு மாதிரியாக பயமாக இருக்கும். அதுவே கனவில் வந்தால் சொல்லவா வேண்டும். கனவில் பன்றியை பார்த்தவர்கள், அக்கனவுக்கான அர்த்தம்/பலன் என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புவார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில், பன்றி கனவில் வந்தால் என்ன பலன்கள் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

பன்றி கனவில் வந்தால் என்ன பலன்:

பன்றி கனவில் வந்தால் என்ன பலன்

பொதுவாக பன்றி என்பது வராக அவதாரமாக போற்றப்படுகிறது. இருப்பினும் பன்றி கனவில் வருவது என்பது நன்மையா என்று கேட்டல் நன்மை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பன்றி கனவில் வந்தால் ஒரு சில பாதிப்புகள், விரைய செலவுகள் ஏற்பட போகிறது என்பதை உணர்த்துவதற்கு தான் நமது கனவில் பன்றி வருவதற்கான அர்த்தம்.

இந்த பன்றி கனவில் வருவதால் நமக்கு சில இழப்புகள், காரிய தடைகள், நஷ்டங்கள், பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வது இது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

அதேபோல் பன்றி இறைவனுடன் வந்தால் அந்த கனவு நல்ல பலன்களை தரும்.

இருப்பினும் பன்றி கனவில் வந்து நம்மை விரட்டுவது போல், கடிப்பது போல், முட்டுவது போல் கனவு கண்டால் நமக்கு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படும்.

பன்றி நம்மை விழுங்குவது போல் கனவு கண்டால் அது நமக்கு நஷ்டங்களில் ஏற்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..?

பரிகாரம்:

ஒருவேளை உங்கள் கனவில் பன்றி வந்தால் உடனே நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால். கனவு கண்ட அடுத்த நாள் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். பைரவர் வழிபாடு செய்வதினால் பன்றி கனவில் வந்தால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் விளக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement