நீங்கள் பிறந்த கிழமை இதுவா? உங்கள் குணாதிசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்..!

Pirantha Kilamai Palangal

பிறந்த கிழமை பலன்கள் | நீங்கள் பிறந்த கிழமை உங்கள் குணத்தைச் சொல்லிவிடும்..!

Pirantha Kilamai Palangal – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய பதிவில் ஒருவர் பிறந்த கிழமையை வைத்து அவர்களது குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஒருவர் பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறந்த கிழமையும் மிகவும் முக்கியமானது. ஜோதிடத்தில் ஒருவர் பிறக்கும் ஒவ்வொரு கிழமைக்கு பலன்களை கணித்து வைத்துள்ளது. ஆக நீங்கள் எந்த கிழமையில் பிறந்தீர்களோ அதற்கான பலன்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

Pirantha Kilamai Palangal 2022

ஞாற்றுக்கிழமை:

இந்த ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், எந்த ஒரு பணிகளையும் மிக எளிதாக மற்றும் திறமையாக செய்யக்கூடியவர் ஆவார். குறிப்பாக இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைத்திறன் அதிகமாகவே இருக்கும். செல்வம் உடையவராக இவர்கள் இருப்பார்கள். மற்றவர்களிடம் கொடுத்த வாக்கினை சிறப்பாக செய்பவர்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களுக்கு இருக்கும். தன்னை சுற்றி இருப்பவர்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள்.

திங்கட்கிழமை:

இந்த திங்கட்கிழமை பிறந்தவர்கள் மிகவும் பொறுமைசாலி என்று சொல்லலாம். குறிப்பாக இவர்கள் இளகிய மனம் கொடவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிரிகளைக்கூட நண்பர்களாக கருதுவார்கள். தனக்கு நெருக்கமான உறவுகளுடன் அன்பாக இருப்பார்கள். இனிமையான வார்த்தைகளால் மற்றவர்கள் ஈர்க்க கூடியவர்கள். இவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். தர்மம், நியாயம் போன்ற விஷயங்களை கடைபிடிப்பவர்கள். இவர்களுக்கு நல்ல கற்பனை திறன் அதிகமாகவே இருக்கும். இவர்களுக்கு சொந்த தொழில் கைகொடுக்கும்.

செவ்வாய்க்கிழமை:

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுபவர்கள் என்று சொல்லலாம். இருந்தாலும் இவர்கள் சாதாரண விஷயங்களுக்கு கூட அதிகளவு உணர்ச்சிவசப்படுவார்கள். வீட்டில் உள்ளவர்களுடன் அதிக அன்பாக இருப்பார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை செய்யும் போது பலரிடம் பலவிதமான யோசனைகளை பெறுவார்கள். இருந்தாலும் இவர்கள் செய்வது மட்டும் தான் சரி என்ற மனப்போக்கை கொண்டவர் ஆவார். மற்றவர்களுக்கு உதவக்கூடியவர். நல்லவனுக்கு நல்லவன், பொல்லாதவனுக்கு பொல்லாதவன் என்று வாழக்கூடியவர். இதன் காரணமாக பலருக்கு இவர்களை பிடிக்காது. மேலும் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் நியாயம் தர்மத்திற்கு கட்டுப்படடவர்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ராசிக்காரங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சவங்களாக இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

புதன்கிழமை:

புதன்கிழமை பிறந்தவர்கள் பல திறமைகளை தன்னுள் கொண்டவர்களாக இருப்பார்கள். இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள். நல்ல கல்வியறிவு கொண்டவர்களாகவும், தெய்வபக்தி கொண்டவர்களாகவும், பிறரை மதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நியாயகமாக பேசி பிறரை ஈர்க்கும் திறன் உங்களுக்கு இருக்கும். உங்கள் செய்கை மூலமாகவே பார்ப்பவர்களை தன் வசம் ஈர்த்துவிடுவீர்கள். இவர்கள் காரியம் நடந்துமுடிய வேண்டும் என்றால் அதற்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களிடம் ஒரு ரகசியத்தை கூறினால் அதனை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பார்களாம்.

வியாழக்கிழமை:

வியாழக்கிழமை பிறந்தவர்கள் மற்றவர்களை போற்றத்தக்க குணங்களை கொண்டவர்களாக, பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். அறநெறியில் விருப்பம் உடையவராய் இருப்பார்கள். உண்மையாக இருப்பீர்கள், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்களாக இருப்பீர்கள். குறுக்கு வழியில் செல்பவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவீர்கள். இவர்கள் உற்றார் உறவினர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த துறையில் ஈடுபட்டாலும் அவற்றில் முன்னேற்றம் அடைவார்கள்.

வெள்ளிக்கிழமை:

வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாற்றல் உடையவர்களாக இருப்பார்கள். கலைத்துறைகளில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது பேச்சி திறமையால் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் திறன் இவர்களிடம் இருக்கும். இவர்கள் எதிர் பாலினத்தினரை கவரும் இயல்புடையவர். இவர்கள் உயர்ந்த காரியங்களை செய்பவர்களாக இருப்பார்கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பிலும், பாசத்திலும் மூழ்கி விடுவார்கள்.

சனிக்கிழமை:

சனிக்கிழமை பிறந்தவர்கள் பொறுமைசாலிகள், தன்னம்பிக்கை மிக்கவர்கள், கடின உழைப்பாளிகள் என்று சொல்லலாம். இவர்களிடம் போராடும் மனப்பக்குவம் இருக்கும். தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் அதனை  நினைத்து கலங்காமல் முன்னேற்ற வழியில் நடப்பவர். மேலும் இவர்கள் நேர்மையான வழியில் நடக்க ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் முழு பொறுப்பையும் ஏற்று நடத்துவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சான்றோரிடமும், ஆன்றோரிடமும் மிகவும் பக்தியுடன் இருப்பார்கள்.  இவர்கள் பொதுவாக தன் உண்டு தான் வேலை உண்டு என்று இருப்பார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்