Place This Item Under the Bureau in Tamil
வீட்டில் அனைவருக்கும் எதோ ஒரு விதத்தில் கஷ்டம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு காரணம் நாம் என்று ஒரு பக்கம் என்று நினைத்தாலும் ஒரு பக்கம் ஆன்மீக ரீதியாக நிறைய விஷயங்கள் உள்ளன. அதில் நாம் வீட்டில் செய்யும் செயல்களில் சில தவறுகள் செய்வதால் கஷ்ட நஷ்டங்கள் வருகிறது என்கிறார்கள்.
அதில் சில விஷயங்களை செய்வதால் நம்முடைய கஷ்ட நஷ்டங்களிலிருந்து வெளியில் வரமுடியும், நம்முடைய கைகளுக்கும் பணம் வரவு அதிகரித்துக்கொண்டே இருக்கும் அது என்ன என்பதை இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
வீட்டில் பணம் சேர என்ன செய்ய வேண்டும்:
இப்போது நாம் இந்த பதிவில் சொல்வதை வீட்டில் செய்தால் தேவையில்லாத மனக்கஷ்டம், உடல் உபாதைகள், விபத்துகள், கண் திஷ்டி தேவையான பணம் சம்பாதித்தாலும் அது தேவையில்லாத செலவுகளால் தீர்ந்து விடும். இதேபோல் செய்வதால் மேல் கொடுப்பட்டுள்ள விஷயத்திலிருந்து தப்பித்து உங்கள் கைக்கு பணம் வந்து சேரும்.
தேவையான பொருள்:
- கல் உப்பு – கொஞ்சம்
- எலுமிச்சை பழம் – 1
முதலில் இந்த பரிகாரம் செய்ய வேண்டிய நாள் அம்மாவாசை, ஞாயிற்றுக்கிழமை, வியாழக்கிழமை போன்ற நாட்களில் இந்த பரிகாரத்தை செய்யலாம். பரிகாரம் செய்ய வேண்டிய நேரம் இரவு 8 மணிக்கு செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும் பரிகாரத்தை செய்யலாம். பெண்கள் மாதவிடாய் நேரங்களில் செய்ய வேண்டாம்.
ஸ்டேப்: 1
முதலில் பயன்படுத்தாத கல் உப்பு பாக்கெட் எடுத்துகொள்ளளவும். அதில் ஒரு கிண்ணத்தில் பாதி அளவு உப்பு கொட்டிக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
மீதி இருக்கும் உப்பை வீட்டிற்கு பயன்படுத்தலாம். இப்போது அந்த கிண்ணத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும்.
நீங்கள் வைக்கும் பழத்தில் எந்த ஒரு கரும்புள்ளியும், அழுகிய பழமாகவோ இருக்காகூடாது. முக்கியமாக பழம் இல்லையென்று காய் எலுமிச்சை வாங்கி வரக்கூடாது.
பழமாக உள்ள எலுமிச்சை பழத்தை இரண்டு பாதியாக நறுக்கி அதனை அந்த கிண்ணத்தில் மேல் நோக்கி இருப்பது போல் வைக்க வேண்டும். அந்த கிண்ணத்தை வீட்டில் உள்ளவர்களை தவிர யாருக்கும் காட்டவும் கூடாது, சொல்லவும் கூடாது.
இதையும் செய்து பாருங்கள் 👉👉 வீட்டில் பணவரவு பலமடங்கு அதிகரிக்க இதை மட்டும் செய்தால் போதும்..!
ஸ்டேப்: 3
உப்பு, எலுமிச்சை பழத்தையும் கிண்ணத்தில் வைத்தோம் அல்லவா அதனை எடுத்து வந்து பீரோவுக்கு அடியில் வைக்க வேண்டும். இப்படி நீங்கள் வியாழக்கிழமை செய்தால் மறுவாரம் வெள்ளிக்கிழமை எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது நீர் நிலைகளிலோ தூக்கி போடலாம்.
இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது ஆகும். உங்கள் வீட்டில் பணக்கஷ்டம், நஷ்டம், நோய் நொடிகள் வராமல் இருக்கும் உங்களுக்கு தேடி வர வேண்டிய பணம் வந்து சேரும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |