எமகண்டம் ராகுகாலத்தில் இதை செய்தால் உங்கள் வாழ்வின் நீங்கள் நினைத்ததை நடத்திக்காட்டும்

Advertisement

ராகு காலத்தில் செய்ய வேண்டியவை

ஹாய் நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் முக்கியமான விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக சில நேரங்களின் நல்லதும் நடக்கும் கேட்டதும் நடக்கும். ஆனால் சில விஷயங்களை சில நேரங்களின் செய்ய மாட்டார்கள். அதில் முக்கியமாக பார்க்க வேண்டிய நேரம் என்றால் அது ராகு காலம், எமகண்டம் ஆகும். இதில் சில விஷயங்களை செய்ய மாட்டார்கள். ஆனால் இது போன்ற நேரங்களின் சில விஷயங்களை செய்தால் அது நல்லதே நடக்கும். வாங்க அது என்னவென்று பார்ப்போம்..!

ராகு காலம், எமகண்டத்தில் செய்ய வேண்டியவை: 

ராகு

ராகு என்பது ராகுவிற்கு உரிய நேரமாகவும், கேதுவிற்கு எமகண்டம் உரிய காலமாக இருக்கிறது. அந்த நேரத்தில் சில விஷயங்களை செய்தால் அது நமக்கு நல்லதே நடக்குமாம் வாங்க அது என்ன என்பதை பார்ப்போம்.

ராகுபகவான் சின்ன விஷயத்தை கூட பெரிதாக மாற்றிவிடுவார். இவர் சில நேரங்களின் நம்மை நாமே தடுக்க முடியாத அளவிற்கு மாற்றிவிடுவார். உதாரணத்திற்கு சொல்ல போனால் தொடர்ந்து பணம் சேர்த்துக்கொண்டு வருகிறோம். அப்போது எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதனை எடுத்து செலவு செய்யாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் ஆனால் இவருடைய உரிய நேரத்தில் அதாவது ராகுகாலத்தில் நாம் எடுக்க கூடாது என்ற பணத்தை கூட சின்ன விஷயத்திற்காக எடுத்து செலவு செய்ய வைத்துவிடுவார். அதனால் தான் ராகுகாலத்தில் சில விஷயங்களை செய்யாமல் தவிர்ப்போம்.

ஆனால் இந்த ராகு காலத்தில் சில விஷயங்களை செய்தால் அது அப்படியே நின்று விடும் அதனால் நாம் வாழ்வுக்கு எப்போதும் ஒத்துவராமல் இருக்க கூடிய சில விசயங்களை செய்தால் அது உங்களின் வாழ்வில் மீண்டும் வராது.

உதாரணத்திற்கு உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை ராகுகாலத்தில் செய்யலாம். அந்த பழக்கம் அப்படியே உங்களை விட்டு நீங்கி விடும்.

கேது

கேதுபகவான் வேலை என்வென்றால் நாம எந்த வேலையை எடுத்தாலும் அதனை உடனே நிறுத்தி விடுவார். நீங்கள் பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ என்ன விஷயம் செய்தாலும் அது உடனே நின்று விடும். இதுவே கேதுவின் விளையாட்டு ஆகும்.

அதேபோல் கட்டத்தில் கேது சரியாக அமையவில்லை என்றால் அவ்வளவு தான் அவர்களின் வாழ்வு முழுவதும் மருத்துவ செலவில் சென்று விடும். என்ன செய்வது மருத்துவ செலவுகள் உடல் உபாதைகள் வந்துகொண்டு தான் இருக்கும் என்று சொல்லாம். ஆனால் அதிலிருந்து நீங்குவது அவரிடமே உள்ளது.

அதனால் மாத்திரை சாப்பிடுபவர்கள் தொடர்ந்து எமகண்டத்தில் மாத்திரை சாப்பிட்டு வாருங்கள், இப்படி மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால் உங்கள் ஆரோக்கிய பிரச்சனை நீங்கி விடும். தொலைத்ததை அந்த இடத்தில் தேடினால் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் அதேபோல் தான் ராகு, கேது பகவான் விளையாட்டு.

கேட்ட வரம் தரும் வெள்ளிக்கிழமை ராகு கால பலன்கள்..!

ராகு எமகண்டத்தில் குழந்தை பிறந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement