ராகு கேது எந்த இடத்தில் இருந்தால் தோஷம் தெரியுமா?

Rahu Ketu Dosham Places in Tamil

ராகு கேது எந்த இடத்தில் இருந்தால் தோஷம்? – Rahu Ketu Dosham Places in Tamil

வணக்கம் நண்பர்களே! இந்தத் தொடரில், இப்போது நாம் தெரிஞ்சிக்கபோறது என்னவென்றால் சர்ப்பதோஷம் என்னும் ராகு கேது தோஷம்! அதாவது ராகு கேதுக்கள் ஜாதக கட்டத்தில் எந்த இடத்தில் இருந்தால் தோஷம் தருவார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அதேபோல் ஒருவது ஜாதக கட்டத்தில் ராகு கேது எந்த இடகத்தில் இருத்தல் நன்மைகளை தருவார் என்பதை பற்றியும்  படித்தறியலாம் வாங்க.

ராகு கேது எந்த இடத்தில் இருந்தால் தோஷம்?

ஒருவரது ஜாதக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும், அதற்கு ஏழாமிடத்தில் ராகு/ கேது இருந்தாலும், இரண்டாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும், எட்டாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும், ஐந்தாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும் தோஷத்தைத் தரும். இவற்றை தான் சர்ப்ப தோஷம் என்று சொல்வார்கள்.

ஒருவரது ஜாதக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதற்கு 7-ம் இடத்தில் ராகு அல்லது கேது கண்டிப்பாக இருப்பார்கள். காரணம் ராகு கேது என்பவர்கள் 180 டிகிரி கோணத்தில் நிரந்தரமாகச் சுற்றி வருபவர்கள். எனவே ராகு இருக்கும் இடத்திற்கு ஏழாம் இடத்தில் கேது இருப்பதும், கேது இருக்கும் இடத்திற்கு 7-ம் வீட்டில் ராகு இருப்பதும் இயல்பான ஒன்றாகும்.

ராகு கேது தோஷம் எப்படி கண்டுபிடிப்பது? – Rahu Ketu Dosham Places in Tamil

Rahu Ketu Dosham

7-ஆம் இடம்:

7-ஆம் இடத்தில் ராகு /கேது இருந்தால் திருமணத்தடை ஏற்படும். லக்னத்தில் இருக்கும் ராகு/ கேது அந்த ஜாதகரின் வளர்ச்சியைத் தடுத்து விடும் அல்லது நிலையான சிந்தனைகளையும் செயல்களையும் ஏற்படுத்த விடாது, 7-ஆம் இடத்தில் ராகு /கேது இருந்தால் வாழ்க்கைத் துணை சரியாக புரிந்துகொள்ள முடியாதவராகவும், எதிர்வினை ஆற்றுபவராகவும், குடும்பத்தோடு இணைந்து செல்ல முடியாதவராகவும் இருப்பார் என ஜோதிட சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

2-ஆம் இடம்:

இரண்டாம் இடத்தில் ராகு/ கேது இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. பணப்பிரச்சினை அதிகரிக்கும். குடும்பம் விருத்தி அடைவதில் பிரச்சினைகள் ஏற்படும். எட்டாம் இடத்தில் இருக்கும் ராகு/ கேதுவால் கணவன் அல்லது மனைவிக்கு ஆபத்து நேரிடும். அவமானங்கள் உண்டாகும். நிம்மதியற்ற வாழ்க்கை உண்டாகும் என்று சொல்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

5-ஆம் இடம்:

ஐந்தாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர பாக்கியம் பெறுவதில் தாமதம் ஏற்படும் அல்லது புத்திர பாக்கியம் இல்லாமல் போகும் என்பதும் இந்த தோஷத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள்

ராகு கேது எந்த இடகத்தில் இருத்தல் நன்மைகளை தருவார்?

​ஜாதகத்தின் 3 வது வீட்டில் ராகு-கேது:

ஜாதகத்தில் மூன்றாவது வீட்டில் ராகு மற்றும் கேது இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல பலனைத் தரும் என கருதப்படுகிறது. ஜாதகத்தின் மூன்றாவது வீடு பலமாகவும் வலிமையாகவும் கருதப்படுகிறது. அப்படி இருக்க ஜாதகத்தின் மூன்றாவது வீட்டில் ராகுவும் கேதுவும் இருந்தால், இந்த கிரகங்கள் குறித்து பயப்படுவதை விட மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

​ஜாதகத்தின் 6 வது வீட்டில் ராகு-கேது:

ஜாதகத்தின் ஆறாவது வீடு எதிரிகள், நோய் ஸ்தானமாக கருதப்படுகிறது. உங்கள் ஜாதகத்தின் இந்த வீட்டில் ராகு அல்லது கேது இருப்பதால், எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. தங்கள் ஆற்றலை நல்ல செயல்களில் பயன்படுத்துகிறார்கள் மற்றும் வெற்றியை அடைகிறார்கள்.

​ஜாதகத்தின் 10 வது வீட்டில் ராகு-கேது:

ஜாதகத்தின் தொழில், கர்ம ஸ்தானமான 10-வது வீட்டில் ராகு அல்லது கேதுவை கொண்டவர்கள். தங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றத்தையும் வெற்றிகளையும் பெறுகிறார்கள்.

​ஜாதகத்தின் 11 வது வீட்டில் ராகு-கேது:

ஜாதகத்தில் 11-ம் வீடு மூத்த சகோதரர், லாப ஸ்தானத்தில் ராகு அல்லது கேது இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். இந்த ஜாதகருக்கு வீண் செலவுகள் இருக்காது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் செய்யும் செலவு, தான தர்மங்கள், கொடை செல்வம் இரட்டிப்பாக திரும்பும். நீங்கள் செய்யக் கூடிய முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கூடும்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்