ரம்ஜான் தொழுகை முறை | Ramzan Tholugai Murai in Tamil

Advertisement

தொழுகை செய்வது எப்படி? | Tholugai Seivathu Eppadi Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நாம் ரம்ஜான் தொழுகை முறை எப்படி பின்பற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். இறை வணக்கத்தை கடமையாக கொண்டு முறைப்படி நிறைவேற்றுவது முஸ்லிம்களின் வழக்கம் ஆகும். இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம், இந்த மாதத்தை நாம் ரமலான் மாதம் என்றும் அழைக்கிறோம்.

இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு காலம் முடிந்தவுடன் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் தொழுகை செய்வது வழக்கம், அந்த வகையில் நாம் இந்த பதிவில் ரம்ஜான் தொழுகை முறை பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ரமலான் தொழுகை முறை:

ரம்ஜான் தொழுகை முறை

இஸ்லாமியர்களின் கடவுளான அல்லாஹ் கொடுத்துள்ள அணைத்து நல்ல நிகழ்வுகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக நடைபெறுவது தான் இந்த தொழுகை.

தொழுவதற்கு முன்பாக உடலில் அனைத்து பாகங்களையும் சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். பின் தலையை தண்ணீரால் தடவ வேண்டும், தடவும்போது தலையின் முற்பகுதியில் இருந்து பிற்பகுதி வரை கொண்டு செல்ல வேண்டும். பிறகு அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹ் என்று கூறவேண்டும். பின்னர் தொழுகையை தொடங்க வேண்டும்.

Ramzan Tholugai Murai in Tamil:

  • பெருநாள் தொழுகை இரண்டு முறையில் நடைபெறும் அது ரக்அத்கள் மற்றும் தக்பீர் தஹ்ரீமா ஆகும்.
  • முதலில் ரக்அத்தில் அல்லாஹும்ம பாயித் பைனீ அல்லது வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லதீ எனும் தூ ஆவை ஓத வேண்டும்.
  • பின்னர் அல்லாஹு அக்பர் என்று 7 முறை இமாம் சொல்ல வேண்டும். அதனை பின்பற்றி வேண்டி கொள்பவர்களும் சத்தம் இல்லாமல் 7 தடவை கூற வேண்டும்.
  • ஸூரத்துல் ஃபாத்திஹா மற்றும் துணை சூராக்கள் ஓதி ருகூவு, ஸஜ்தா போன்றவற்றையும் மற்ற தொழுகையில் செய்பவற்றையும் செய்ய வேண்டும்.
  • அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்து அல்லாஹு அக்பர் என்று ஐந்து தடவை இமாம் சொல்ல வேண்டும், அதனை பின்பற்றி வேண்டி கொள்பவர்களும் சத்தம் இல்லாமல் 5 தடவை கூற வேண்டும்.
  • பிறகு எப்பொழுதும் செய்யும் தொழுகையைபோல் ஸூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி, ருகூவு, ஸஜ்தா போன்ற எல்லாவற்றையும் செய்து தொழுகையை முடிக்க வேண்டும்.
  • இரண்டாவது தொழுகை முறையான தக்பீர் தஹ்ரீமா இதற்கு இடையில் எந்த துஆவும் ஓத கூடாது, ஏனெனில் நபி அவர்கள் எந்த துஆவும் கற்று கொடுக்கவில்லை என்பதால்.
  • ஸல் அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இதை கிராஅத்திற்கு முன்பு கூற வேண்டும்.

ஓத வேண்டிய சூராக்கள்:

  • முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (88 – வது) அத்தியாயத்தையும் நபி அவர்கள் கூறியுள்ளார்.
  • ஒரு சில நேரத்தில் காஃப் (50 – வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ஸூரத்துல் கமர் (54 – வது) அத்தியாயத்தையும் கூறியுள்ளார்.
  • பெருநாள் மற்றும் ஜும்ஆ (ஜூம்ஆ என்பது இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமையில் தொழுவது) இரண்டும் ஒரே நாளில் வந்தால் இரண்டு அத்தியாயங்களையும் இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்.

தொழுகை முறை விளக்கம்:

  • முதலில் தொழ விரும்பும் தொழுகையை மனதில் நினைத்து கொள்ள வேண்டும்.
  • அல்லாஹு அக்பர் என்று சொல்லி இரண்டு கைகளையும் நேராக உயர்த்தி, வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது வைத்து கட்டி கொள்ள வேண்டும்.
  • துஆவை- ஓதவேண்டும். அதன் பின்னர் ஃபாத்திஹா சூராவை ஓதவேண்டும், அதன் பின்னர் குர்ஆனின் சில வசனங்களை ஓத வேண்டும். அல்லாஹு அக்பர் என்று கூறி ருகூவு செய்யவேண்டும்.
  • பிறகு இரண்டு உள்ளங்கை, முட்டுக்கால்கள், கால் விரல்கள் அனைத்தும் பூமியில் படுமாறு ஸுஜுது சொல்ல வேண்டும்.
  • ஸுஜுதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று மூன்று முறை கூறவேண்டும். பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜுதிலிருந்து தலையை உயர்த்த வேண்டும்.
  • ரகஅத்தைப் தொழ வேண்டும். ரகஅத்தின் இரண்டு ஸஜ்தாக்களையும் செய்த பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டு ஸஜ்தாவிற்கும் இடையில் அமர்ந்திருந்தது போன்று அமரவேண்டும்.
  • இப்படி உட்கார்ந்திருக்கும்போது அத்தஹிய்யாத் எனும் பிரார்த்தனையை சொல்ல வேண்டும்.
  • அதன் பின்னர் உங்களுடைய பிரார்த்தனையை வேண்டி கொள்ளலாம், வேண்டிய பின்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறம் முகத்தை திருப்பி சொல்ல வேண்டும், அதே போன்று இடது புறம் முகத்தை திருப்பி சொல்ல வேண்டும்.
  • இரண்டுக்கும் அதிகமான ரகஅத் உள்ள தொழுகையை செய்யும்போது இரண்டாம் ரகஅத்தில் ஸலாம் கொடுக்காமல் ரகஅத்திற்காக எழுந்து நிலைக்கு வந்து இரண்டு கைகளையும் நேராக உயர்த்தி, வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது வைத்து கட்டி கொள்ள வேண்டும்.
  • பிறகு சூரத்துல் ஃபாத்திஹா மட்டும் ஓதவேண்டும். இறுதியாக ஸலாம் கொடுத்து தொழுகையை முடிக்கவேண்டும்
ரம்ஜான் நோன்பு இருப்பது எப்படி?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement