வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ரிஷப ராசிக்கு எந்த நட்சத்திரம் பொருந்தும்

Updated On: February 10, 2025 11:57 AM
Follow Us:
ரிஷப ராசி திருமண வாழ்க்கை
---Advertisement---
Advertisement

ரிஷப ராசி திருமண வாழ்க்கை பலன்கள்..!

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்றைய பதிவில் ரிஷப ராசிகாரர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஒவ்வொரு ராசிக்கும் நட்சத்திரங்கள் இருக்கும்.

அதுபோல திருமணம் செய்யும் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அந்த வகையில் எந்த நட்சத்திரத்திற்கு எந்த ராசியின் நட்சத்திரம் பொருந்தும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து பாருங்கள்  திருமண பெயர் பொருத்தம்

ரிஷப ராசி திருமண பலன்கள்:

ரிஷப ராசிக்காரர்கள் கம்பீரமான தோற்றத்தையும், நடுத்தரமான உயரத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மிகவும் சாதுவாகவும், மிகவும் அமைதியான குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வார்கள்.

அன்னையின் மீது அதிகளவு அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ரிஷப ராசிக்காரர்கள்  சிலருக்கு திருமணம் தாமதமாகத் தான் நடைபெறும். இந்த ராசிக்காரர்கள் சிறுவயதிலேயே குடும்ப பொறுப்புகளை சுமக்கும் இடத்தில் இருப்பார்கள். ரிஷப ராசிகாரர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

Rishabam Rasi Natchathiram:

ஒவ்வொரு ராசியிலும் மூன்று நட்சத்திரங்கள் இருக்கிறது. அந்த வகையில் ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிடம், கார்த்திகை போன்ற நட்சத்திரங்கள் இருக்கிறது.

இதையும் படியுங்கள் ⇒ ரிஷபம் பிறப்பு முதல் இறப்பு வரை இப்படித்தான் இருக்கும்

ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் திருமண பொருத்தம்:

ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் திருமண வாழ்க்கை

ரிஷப ராசி நட்சத்திரம்  பொருத்தமான ஆண் நட்சத்திரம்   பொருத்தமான பெண் நட்சத்திரம்  

கார்த்திகை நட்சத்திரம் (பாதம் 2,3,4)

சதயம்

அஸ்தம்
சித்திரை 1,2
அவிட்டம் 3,4
கேட்டை

ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் பெண்கள்:

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த இரண்டு பாதங்களுக்கு எந்த தோஷமும் ஏற்படாது. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் தொட்ட காரியங்களில் தடைகள் எற்படும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மன தைரியம் உடையவர்களாக இருப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதனை தைரியமாக சொல்ல கூடியவர்களாக இருப்பார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு முன்கோபம் அதிகமாக காணப்படும். இதனால் அவர்களுக்கு இரத்த அழுத்தம், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இவர்கள் மற்றவர்களை வழிநடத்தி கொண்டு செல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதனால் ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர் போன்ற துறைகளில் விளங்குவார்கள். மேலும் மற்றவர்கள் மீது அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள்.

ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் திருமண பொருத்தம்:

ரிஷப ராசி நட்சத்திரம் பொருத்தமான ஆண் நட்சத்திரம்   பொருத்தமான பெண் நட்சத்திரம்  
ரோகிணி நட்சத்திரம் மிருகசீரிஷம் 1,2
புனர்பூசம் 4
உத்திரம் 1
பூரட்டாதி
பரணி
மிருகசீரிஷம் 1,2
உத்திரம்
அனுஷம்
உத்திரட்டாதி

ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் திருமண வாழ்க்கை:

ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்ததை அடைய வேண்டும் என்ற குணம் உடையவர்களாக இருப்பார்கள். அதனால் தான் அவர்கள் விரும்பிய காதலன், காதலியை பல போராட்டங்களுக்கு பிறகு அவர்களையே திருமணம் செய்திருப்பார்கள். தன்னுடைய குழந்தைகளை சுதந்திரமாக வாழ வைக்க கூடிய குணம் உடையவர்களாக இருப்பார்கள். மேலும் திருமண வாழ்க்கையில் அதிகம் சோம்பேறி தனம் உடையவர்களாக இருப்பார்கள்.

இதையும் பாருங்கள் ⇒ மேஷம் ராசிக்கார்கள் எந்த ராசிகாரர்களை திருமணம் செய்யக்கூடாது..?

ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம்:

ரிஷப ராசி நட்சத்திரம் பொருத்தமான ஆண் நட்சத்திரம்   பொருத்தமான பெண் நட்சத்திரம்  
மிருகசீரிடம் (பாதம் 1,2) உத்திரம் 1
உத்திராடம் 2,3,4
திருவோணம்
சதயம்
அஸ்வனி
ரோகிணி
புனர்பூசம் 4
அஸ்தம்
பூரட்டாதி
ரேவதி
ரோகிணி

ரிஷப மிருகசீரிஷம் நட்சத்திரம் திருமண வாழ்க்கை:

ரிஷப ராசியில் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளமையிலையே திருமணம் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பாசம் மற்றும் அன்பிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் நினைத்த துணையை திருமணம் செய்து கொள்ளும் தைரியம் இவர்களிடம் காணப்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்ற குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now