வாழ்க்கையில் யோகம் பெறுவதற்கு சரஸ்வதி பூஜையை இப்படி செய்து வழிபடுங்கள்

saraswathi pooja in tamil

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?

வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிகம் பதிவில் வாழ்க்கையில் யோகம், கல்வி, வேலை, போன்றவற்றை பெறுவதற்கு சரஸ்வதி பூஜையை எப்படி கொண்டாடுவது என்றுதான் தெரிந்து கொள்ளப்போகிறோம். சரஸ்வதி பூஜை என்பது ஒரு ஆற்புதமான பூஜை என்றும் அழைக்கப்படுகிறது, இந்த சரஸ்வதி தேவியை வழிப்பட்டு வருவதால் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல அறிவையும் கல்வியையும் தருகிறது. இந்த சரஸ்வதி, ஆயுத பூஜை ஆனது நவராத்திரி கடைசி திதி அன்று கொண்டாடப்படுகிறது, மேலும் இவற்றை எப்படி கொண்டாட வேண்டும் என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

செவ்வாய் கிழமை அன்று கடைபிடிக்க வேண்டியவை.

சரஸ்வதி பூஜை கொண்டாடும் முறை:

சரஸ்வதி பூஜையை கொண்டாடுவதற்கு முன்பு வழிபாடு  செய்யும் இடத்தை நன்றாக தூய்மைபடுத்த வேண்டும்.  அதன் பிறகு அந்த இடங்கள் முழுவதும் வாசனையான சந்தனத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் கலந்து, வழிபாடும் இடம் முழுவதும் தெளிக்கவேண்டும்.

அடுத்ததாக வீடு, அலுவலகம் போன்ற இடத்தில் கொண்டாட போகிறீர்கள் என்றால் அந்த இடம் முழுவதும் மாவிலை மற்றும் வாழை தோரணங்களை கட்டவேண்டும். அடுத்ததாக சரஸ்வதியின் படத்தை வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து, சரஸ்வதிக்கு  உகந்த வெள்ளை நிறத்தை உடைய தாமரை, மல்லி, முல்லை, நந்தியாவட்டை, சம்மங்கி போன்ற பூக்களை கொண்டு மாலையாக அலங்கரித்து சாமிக்கு சாற்ற வேண்டும்.

அதன் பிறகு அவுல், சர்க்கரை, பொரி போன்ற பொருட்களை கலந்து சரஸ்வதி தேவிக்கு படைக்கவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் சுண்டல், பால் சாதம், சர்க்கரை பொங்கல் போன்ற பொருட்களை படைத்து நெய்வேத்தியம் செய்யலாம்.

அடுத்ததாக குழந்தைகள் படிக்கும் புத்தகம், எழுதுகோள்கள்,  பயிற்சி பொருட்கள், கலை படைப்புகள் போன்றவற்றை வைத்து சரஸ்வதி மந்திரத்தை கூறி  வணங்குவதால் வாழ்க்கையில் தேவையான கல்வி, உடல் ஆரோக்கியம்,  தொழில், செல்வம் போன்றவற்றை பெருகி நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதற்காகவும் இந்த சரஸ்வதி பூஜையை இப்படி கொண்டாடுவது நல்லது.

சரஸ்வதி பூஜை கொண்டாடும் நேரம்:

சரஸ்வதி பூஜையை சிறப்பாக நல்ல நேரத்தில் செய்வதற்கு சூரியன் மறையும் நேரமான  6.23 மாலை நேரத்தில் கொண்டாடலாம், அல்லது சூரிய அஸ்தமாகும்   6.07 மணி ஆகிய நேரங்களில் ஆயுதங்களுக்கும், புத்தகங்களுக்கும்  பூஜை செய்யலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal