சரஸ்வதியின் மூல மந்திரம்..! | Saraswati Moola Mantra in Tamil

Advertisement

சரஸ்வதியின் மூல மந்திரம்| Saraswati Moola Mantra in Tamil

அனைத்து ஆன்மிக நெஞ்சங்களுக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் கல்வி, அறிவு, ஞானம் ஆகியவற்றின் தெய்வமாக திகழ்கின்ற சரஸ்வதி தேவியின் அருளை பெற உதவுகின்ற சரஸ்வதியின் மூல மந்திரத்தையும் அதனை கூறுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இந்து மதத்தினர் வணங்கக்கூடிய பெண் கடவுள்களில் முக்கியமானவர் சரஸ்வதி தேவி. இவர் பிரம்மாவின் சக்தியாக கொள்ளப்படுகிறார். கல்விக் கடவுளாகவும் எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதப்படுகிறார். எனவே, இத்தகையினை சிறப்பினை உடைய சரஸ்வதி தேவியின் மூல மந்திரத்தை கூறி வந்தால் பலவிதமான நன்மைகள் நம்ம வந்து சேரும்.

சரஸ்வதி மூல மந்திரம் வரிகள்:

Saraswati Mantra in Tamil

ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ 

ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ

ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ 

ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ 

ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ 

பலன்கள்:

  • வீணையை கையில் ஏந்திக்கொண்டு அருள் புரிந்துகொண்டிருக்கும் சரஸ்வதி தேவியின் மூல மந்திரத்தை கல்வி பயில்கின்ற மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லுகின்ற பெரியவர் வரை அனைவருமே சரஸ்வதியை மனதில் நினைத்து கொண்டு தினமும் காலை மற்றும் மாலை என இருவேலைகளிலும் 108 முறை கூறுவது நன்மையை அளிக்கும்.
  • அதேபோல் இம்மந்திரத்தை புதன்கிழமை மற்றும் சரஸ்வதி பூஜை தினத்தில் மாலை வேலையில் சரஸ்வதியை மனதில் நினைத்து கொண்டு பூஜை அறையில் விளக்கேற்றி 108 முறை அல்லது 1008 முறை சொல்வதினால்  உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆயுளை அதிகரிக்க உதவும்.
  • மேலும் அவர்களின் எண்ணங்கள், சிந்தனை ஆகியவை நன்கு தெளிவு பெரும். குடும்பத்தில் உள்ள கல்வி பயில்கின்ற மாணவ மாணவிகளுக்கு நல்ல அறிவும், ஆற்றலும் அதிகரிக்கும்.
  • மேலும் நீங்கள் தொடங்குகின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். உங்களுக்கு அனைத்து விஷயங்களை பற்றிய ஞானம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கான சரஸ்வதி மந்திரங்கள்:

” ஓம் ஐம் ஹ்ரீம் க்ளீம் மகா சரஸ்வதி தேவியே நமஹ “

இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். முடிந்த வரை 108 முறை உச்சரித்தால் நல்ல பலன் அளிக்கும்.

“ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரம்ம பத்னியை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்”

இந்த சரஸ்வதி காயத்ரி மந்திரத்தை, ஏதேனும் நீங்கள் கலை கற்க போகிறீர்கள் என்றால் அதற்கு முன்பாக இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதனை தொடர்ந்து உச்சரித்து வந்தால் கலைவாணியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

திருவெம்பாவை பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement