Selva Valam Peruga Tips in Tamil
அனைத்து ஆன்மிக நெஞ்சம் கொண்ட நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்..! பொதுவாக நாம் அனைவருக்கும் நமது இல்லத்தில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன செய்தால் நமது வீடுதேடி செல்வம் வரும் என்ற வழிதான் தெரியாது. இனிமேல் அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த பதிவில் கூறியுள்ள குறிப்புகளை செய்து பாருங்கள். அதன் பிறகு உங்கள் வீடுதேடி செல்வம் வருவதை யாராலும் தடுக்க முடியாது என ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
Pooja Room Tips in Tamil:
ஒரு வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் வீட்டின் பூஜை அறை தெய்வீக ஆற்றல் நிறைந்தாக இருக்க வேண்டும். இதற்கு சில பூஜை அறை குறிப்புகள் வழிவகுக்கிறது.
அதில் முக்கியமான ஒன்றாக தெய்வ ஆகர்ஷண பொடி இருக்கிறது. அதனால் இந்த தெய்வ ஆகர்ஷண பொடியை எவ்வாறு தயாரிப்பது மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- ஏலக்காய் – 15
- கிராம்பு – 15
- சோம்பு – 2 டேபிள் ஸ்பூன்
- வெட்டிவேர் – 1 கைப்பிடி அளவு
- மஞ்சள்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- சந்தனப்பொடி – 2 டேபிள் ஸ்பூன்
- பச்சைக்கற்பூரம் – 1 டீஸ்பூன்
- ஜவ்வாது பொடி – 1 டீஸ்பூன்
மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து காற்றுப்புகாத படி மூடிப்போட்ட கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். இப்போது தெய்வ ஆகர்ஷண பொடி தயார்.
பயன்படுத்தும் முறை:
இந்த தெய்வ ஆகர்ஷண பொடியிலிருந்து 1 டீஸ்பூன் எடுத்து அதனை தண்ணீரில் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் பன்னீரையும் ஊற்றி கலந்து உங்கள் வீடு முழுவதும் தெளிப்பதின் மூலம் உங்கள் செல்வ வளமும் அதிகரிக்கும் என சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
அதேபோல் தெய்வ ஆகர்ஷண பொடியிலிருந்து 1 டீஸ்பூன் எடுத்து அதனுடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சந்தானம் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து உங்கள் பூஜை பாத்திரங்களுக்கு பொட்டாக வைக்கவேண்டும்.
இப்படி தெய்வ ஆகர்ஷண பொடி கலந்த பொட்டு வைக்கப்பட்ட பூஜை பாத்திரங்களை பயன்படுத்தி பூஜை அறையில் உள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்வதின் மூலமும் உங்கள் வீட்டில் உள்ள தெய்வீக ஆற்றல் அதிகரிக்கும். மேலும் செல்வ வளமும் பெருகும் என ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
மேலும் உங்கள் பூஜை அறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் தண்ணீரில் இந்த தெய்வ ஆகர்ஷண பொடியை சிறிதளவு கலந்து பின்னர் சுத்தம் செய்வதின் மூலமும் உங்கள் வீட்டின் தெய்வீக ஆற்றல் அதிகரிக்கம்.
உங்கள் பூஜை அறையில் இதை மட்டும் செய்தால் போதும் செல்வம் பெருகும்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |