Sukra Peyarchi Palangal in Tamil
பொதுவாக ஆன்மிகத்தில் கூறப்படும் ஒன்பது கிரகங்களில் ஆடம்பரம், அழகு, காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் இருந்து புதன் ஆளும் மிதுன ராசிக்கு கடந்த மே 2 ஆம் தேதி பெயர்ச்சி ஆகியுள்ளார். சுக்கிரன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றம் ஏற்படும். அதிலும் குறிப்பாக இந்த சுக்கிரனின் பெயர்ச்சியால் நிதி நிலையில் ஒருவித மாற்றம் ஏற்படும். அதுவும் மிதுன ராசிக்கு சுக்கிரன் செல்வதால், சில ராசிக்காரர்கள் நல்ல பண வரவை பெறவுள்ளார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
குரு உதயமாவதால் இந்த 5 ராசிக்காரர்கள் தான் அதிர்ஷ்ட மழையில் முழுமையாக நனைய போகின்றார்கள்
சுக்கிரனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெற போகும் 3 ராசிக்காரர்கள்:
ரிஷபம்:
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆகியுள்ளார். இதனால் உங்களின் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும் உங்களின் பணம் எங்காவது மாட்டிகொண்டு இருந்தால் அது திரும்ப கிடைக்கும்.
அதாவது நீங்கள் யாரிடமாவது கொடுத்த பணம் திரும்ப வரவில்லை என்றால் அது இந்த கால கட்டத்தில் திரும்ப கிடைக்கும். அதே போல் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கலாம்.
மேலும் மார்கெட்டிங், மீடியா, வக்கீல் துறையில் இருப்பவர்களுக்கு இக்கால கட்டம் மாற்றம் ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆகியுள்ளார். இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். அதாவது இந்த சுக்கிர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவு கிடைக்கும்.
இந்த கால கட்டத்தில் நீண்ட நாட்களாக இருந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் வாய்ப்புள்ளது. இந்த கால கட்டத்தில் நீங்கள் ஏதாவது தொழில் தொடங்கினீர்கள் என்றால் அதில் நல்ல முன்னேற்றம் மற்றும் லாபம் கிடைக்கும்.
இந்த 5 ராசிக்காரர்கள் தான் மிகவும் தைரியசாலியாம் இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க
கும்பம்:
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆகியுள்ளார். எனவே இந்த பெயர்ச்சியால் உங்களின் வசதிகள் பெருகும். அதாவது நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
இந்த கால கட்டத்தில் உங்களின் குழந்தைகளால் உங்களுக்கு பெருமையும் நன்மைகளும் கிடைக்கும். படிப்பை முடித்த மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |