சூரிய கடவுளுக்கான கோவில் அமைந்துள்ள இடம் எது தெரியுமா?

Advertisement

சூரிய கடவுளுக்கான கோவில் இருக்கும் இடம் | Suriya Kadavul Kovil Ulla Idam:

Suriya Kadavul Kovil Ulla Idam:- பொதுவாக இந்து சமயத்தில் ஒவ்வொரு கடவுள்களுக்கும் தனி தனியாக கோவில்கள் இருக்கும். இந்துக்கள் சூரியனை தெய்வமாக வழிபடுவார்கள். இந்தியாவில் சூரியனுக்காக அமைக்கப்பட்ட முதல் கோயில் கொனார்க் சூரிய கோவில். சரி இந்த பதில் சூரிய கடவுளுக்கான கோவில் அமைத்துள்ள இடம் எது?, சூரிய கடவுள் கோவிலின் அமைப்பு மற்றும் அதன் வரலாறு சிறப்புகளை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாமா?

கொனார்க் சூரிய கோவில் வரலாறு:

கொனார்க் சூரியக் கோவில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலைநயம் மிகுந்த கோவில் ஆகும். மேலும் இந்த கொனார்க் சூரிய கோயில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவ சூரியக் கோவில். இது கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் கட்டப்பட்ட கோயில் ஆகும்.

உதயம், நண்பகல், மாலை ஆகிய மூன்று சூரிய ஒளி அமைப்பை கொண்டு சூரிய கடவுளுக்கு கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் அமைப்பான உதயகால சூரியனுக்கான கோவில்தான் முதலில் அமைந்தது. அந்தக் கோவிலே இன்றைய ஒரிசா மாநிலத்தில் அமைத்துள்ளது.

சோமநாதர் கோவில் அமைந்துள்ள இடம்?

கோவில் அமைப்பு:

konark sun temple images

இந்த கொனார்க் சூரியக் கோவில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலின் உட்பகுதியை பார்த்தால் அந்த காலத்துலேயே இப்படி ஒரு கட்டட அமைப்பா என்று நாம் வியந்து போவோம். கோயிலுக்குள் தூண்கள் காணப்படவில்லை, ஏனென்றால் ஒவ்வொரு கற்களுக்கும் நடுவில் இரும்பு தூண்களைக் கொடுத்து இணைத்துக் கட்டியுள்ளனர்.

ஏழு குதிரைகள் பூட்டி, 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருவது போல் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு குதிரைகள் என்பது ஏழு நாட்களும், 24 சக்கரம் என்பது 24 மணி நேரத்தையும் குறிக்கும் விதத்தில் இந்த கோயிலின் அமைப்பு உள்ளது.

இக்கோவிலை சூரியன் கோவில் என்று சொல்வதை விட காம தேவன் கோவில் என்று தான் சொல்ல வேண்டும். இந்த கோவிலில் அனைத்துக் கட்டிட பகுதிகளிலும் காமம் வழிந்தோடுகிறது. காம நிலையை சித்தரிக்கும் படங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. காமம் எத்தனை நிலை என்பதை இவ்வளவு துல்லியமாக சிலைகளாக வடித்த சிற்பிகளின் கலைத்திறனை பாராட்ட வார்த்தைகள் இல்லையாம்.

இதையும் படியுங்கள் –> சூரிய கடவுளுக்கென்று தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட சூரியனார் திருக்கோவிலின் சிறப்பு..!

சிறப்பு:

இந்தியாவில் சூரிய பகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு ‘உலகப் பண்பாட்டுச் சின்னமாக’ 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

விழாக்கள்:-

இந்த கொனார்க் சூரிய கோவிலிலும் சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன. கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் ‘மஹாசப்தமி விழா’ பிரசித்தம். சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது.

போக்குவரத்து:-

இந்த சூரிய கடவுளுக்கான கோவிலுக்கு போக்குவரத்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது புவனேசுவரில் இருந்து 65 கிமீ தொலைவிலும் புரியில் இருந்து 35 கிமீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று விடலாம். புரி, புவனேசுவரில் தொடருந்து நிலையங்கள் உள்ளன. புவனேசுவரில் விமான நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திரபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத்தலமாகும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement