சூரிய திசை யாருக்கு யோகம் தரும்..!

Advertisement

சூரிய திசை பலன்கள்| Surya Thisai Palan

surya thisai pariharam: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சூரிய திசை பலன்களை பற்றி பார்க்கப்போகிறோம். ஜோதிட பலன்களில் திசை என்பது நவ கிரகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு கிரகங்களும் மனிதனின் வாழ்வில் அந்த கிரகத்திற்குரிய காலம் வரை ஆதிக்கம் செலுத்தும் நிலை ஆகும்.

ஒருவருக்கு ஜாதகம் கணிக்கின்ற போது அவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் தசா புக்தி பலன்கள் பார்க்கும் போது ஜாதகருடைய தசாநாதன் சிறப்பாக அமைந்தால் அதன் பலன்கள் சிறப்பாக இருக்கும். நவகிரகங்களில் முதன்மையானவர் உலகிற்கு ஒளியினை தருபவரும், மனிதர்களில் தந்தைக்கு காரகனாக பித்ருகாரகன் என்று சொல்லப்படுபவர் சூரிய பகவான். இந்த சூரிய பகவானை சூரிய திசை குறித்தும், சூரிய திசையின் பலன்களை விரிவாக அறிந்துகொள்ளலாம்.

surya thisai pariharam

முதன்மை கிரகம்:

surya thisai pariharamவானில் தோன்றிருக்கும் 9 நவகிரகங்களில் முதன்மை கிரகம் என்று சொல்லக்கூடியது சூரிய கிரகம் ஆகும். சூரியனின் ஒளி உலகம் முழுவதிற்கும் வாழ்வு அளிப்பதாக இருக்கின்றது. இதனை அறிவியல் ரீதியாக பார்க்கும் பொழுது பல ஆண்டுகளுக்கு முன்பு இப்போது நாம் வாழும் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் சூரியன் திசையில் இருந்து பிரிந்தது என்று கூறுகிறார்கள்.

இதனால் உலகில் வாழும் உயிர்களின் மீது ஒரு வித ஆக்கபூர்வமான ஆற்றலை சூரியன் செலுத்தியதாக சொல்லப்படுகிறது.

சூரிய திசை காலம்:

surya thisai pariharamநவ கிரகங்களில் முதன்மை பெற்ற சூரிய பகவானின் சூரிய திசையின் காலம் 6 வருடம் ஆகும். ஜாதகத்தில் மிக குறுகிய கால திசையினை கொண்ட கிரகமாக விளங்கி வருகிறார் சூரிய பகவான்.

சூரிய பகவான் தன் தசா காலத்தில் பல பலன்களை ஜாதகருக்கு உண்டாக்குகிறார். சூரிய பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னம் என்று சொல்லக்கூடிய முதல் வீட்டிற்கு 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தாலும், அந்த இடத்தில் சூரியனின் ஆட்சி உச்சி நிலையினை அடைந்திருந்தாலும் தனது திசா காலத்தில் அந்த ஜாதகருக்கு நல்ல அதிகார பதவிகளை கொடுப்பார்.

யோகம் பெறுபவர்கள்:

சமுதாயத்தில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவிற்கு அந்த ஜென்ம லக்ன படி உள்ள ஜாதகர்கள் பெரிய நிலையினை அடைவார்கள். அதோடு இவர்களுக்கு பெரியவர்களின் தொடர்புகள் உண்டாகக்கூடும்.

புகழ் உண்டாகுவதற்கு சில காரியங்களில் பாக்கியம் ஏற்படும். முக்கியமாக இந்த ஜாதகக்காரர்கள் காவல் துறை, ராணுவம் போன்ற துறைகளில் தலைமை பதவியை பெறுவார்கள்.

newபெண்கள் எந்த கிழமையில் ருதுவானால் என்ன பலன்..!

பலன்கள் தரும் சூரிய திசை:

surya thisai pariharam

ஒருவருடைய ஜாதக பலனில் சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுவதும் மகரம், கும்பம் போன்ற சனியின் வீடுகளில் அமையப் பெறுவதும், 8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமையப் பெறுவதும் சூரிய திசை காலங்களில் அந்த ஜாதகருக்கு பாதகமான பலன்கள் தரும்.

வழிபாட்டு நன்மை:

surya thisai pariharamமேல் கூறியுள்ள சூரிய திசை ஜாதகங்களில் பாதகமான நிலையில் அமையபெற்றவர்களும், சூரிய திசை நடந்து கொண்டிருப்பவர்களும் தங்களுடைய வலது கை மோதிர விரலில் மாணிக்கக் கல் வைத்து மோதிரத்தினை அணிந்து கொள்வது, சிவன் வழிபாடு, பிரதோஷ வழிபாடு, சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் தீய செயல்கள் நம்மிடம் இருந்து விலகி நன்மைகள் பல அடையலாம்.

newநம் கனவில் என்ன வந்தால் என்ன பலன்..! Kanavu Palangal in Tamil..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement