பற்கள் அமைப்பு
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் பற்களின் அமைப்பை வைத்து உங்களின் குணத்தை தெரிந்து கொள்வோம். நம் முகத்திற்கும் அழகு சேர்ப்பதில் பல்லும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பற்கள் அமைப்பு இருக்கும். மூக்கின் வடிவம், blood group, பிடித்த எண் போன்றவற்றை வைத்து குணங்களை அறியலாம். அதே போல் பற்களின் வடிவத்தை வைத்து நம் குணங்களின் தெரிந்துகொள்ளலாம். சிங்க பல் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். அது போல் அடுக்கு பல், கூர்மையான பல் என்று பல வகை உள்ளது. வாங்க உங்களின் குணத்தை தெரிந்துகொள்வோம்.
உங்களது மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படியுங்கள் ⇒ மூக்கின் வடிவத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்..!
குவிந்த பற்கள்:
குவிந்த பற்கள் உடையவர்கள் சின்ன ஏமாற்றத்தையும் தாங்கி கொள்ள மாட்டார்கள். மனது இரக்க குணம் உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் மனது புண்படும்படி பேசிவிடுவார்கள். குவிந்த பற்கள் உடையவர்கள் மற்றவர்கள் இவர்களது பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
சீரற்ற பற்கள்:
சீரற்ற பற்கள் உடையவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். மற்றவர்களின் மனது காயம்படும்படி பேசி விடுவார்கள். மற்றவர்களை ஈஸியா புரிந்து கொள்வார்கள். அவர்களின் குணம் அறிந்து நடந்து கொள்வார்கள்.
பற்களை விட ஈறுகள் அதிகமாக இருப்பவர்கள்:
பற்களை விட ஈறுகள் அதிகமாக உடையவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தமாட்டார்கள். நண்பர்கள் மீது அன்பு உடையவர்களாக இருப்பார்கள். அதிகமாக பொய் சொல்வார்கள்.
கும்பலான பற்கள்:
கும்பலான பற்கள் உடையவர்கள் நேர்மையாக இருப்பார்கள். கற்பனை திறன் உடையவர்களாக இருப்பார்கள். மற்றவரிடம் பேசும் போது ஈகோ குணம் இல்லாமல் பேசுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்.
குழி போன்ற பற்கள்:
குழி போன்ற பற்கள் உடையவர்கள் வாழ்க்கையில் தோல்வியே மட்டும் சந்திப்பார்கள். இவர்களது வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திப்பார்கள்.
கூர்மையான பற்கள்:
கூர்மையான பற்கள் உடையவர்கள் புத்தி கூர்மையுடனும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். கணித பாடத்தில் சிறந்து விளங்குவார்கள். எடுத்த காரியத்தில் பல தடைகளை தாண்டி வெற்றியை அடைவார்கள். பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |