மற்றவர்களிடம் இருந்து இந்த 3 பொருட்களை தானமாக வாங்காதீர்கள்..! கடன் சுமை அதிகரிக்கும்..!

Advertisement

Thanama Vanga Kudatha Porutkal

இன்றைய ஆன்மிகம் பதிவில் மற்றவர்களிடம் இருந்து தானம் வாங்க கூடாத பொருட்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நம்மில் சிலர் வீட்டில் ஏதாவது பொருள் தீர்ந்து விட்டால் அந்த நேரத்திற்கு பக்கத்து வீட்டில் அல்லது எதிர் வீட்டிலோ சென்று தானமாக பொருட்கள் வாங்கி வருவோம். இதுபோன்ற நிகழ்வு இன்றும் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுபோல மற்றவர்களிடம் இருந்து தானமாக பொருட்கள் வாங்குவது நம் வீட்டில் கடன் சுமையை அதிகரிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் தானமாக வாங்க கூடாத பொருட்கள் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு கஷ்டம் வராமல் இருக்க இந்த பொருட்களை தானமாக கொடுக்காதீர்கள்

தானமாக வாங்க கூடாத பொருட்கள்:

கடன் பிரச்சனை அனைவருக்குமே இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் அது வீட்டில் தங்குவதே இல்லை என்று பலரும் புலம்புகிறார்கள். ஆனால் நாம் செய்யும் சிறிய தவறுகளால் கூட கடன் சுமை அதிகரிக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..?

ஆனால் அது தான் உண்மை. நாம் மற்றவர்களிடம் இருந்து தானமாக பொருட்கள் வாங்கினாலும் நம் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும். பணவரவு குறைய தொடங்கும். அதனால் இந்த 3 பொருட்களை மற்றவர்களிடம் இருந்து தானமாக வாங்க கூடாது.

சர்க்கரை: 

வெள்ளை சர்க்கரை

சர்க்கரையை நாம் யாரிடம் இருந்தும் தானமாகவோ அல்லது இலவசமாகவோ வாங்க கூடாது. இந்த சர்க்கரையை நாம் தானமாக வாங்குவதால் நம் வீட்டில் பணவரவு குறைய தொடங்கும். சர்க்கரை சுக்கிர பகவானின் அம்சமாக இருக்கிறது.

அதனால் சர்க்கரையை காசு கொடுத்து வாங்க வேண்டும். அப்போது தான் பணவரவு அதிகரிக்கும். இதை நாம் தானமாக வாங்கினால் பணவரவு தடைபடும். வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும். அதனால் சர்க்கரையை தனமாக வாங்காதீர்கள்.

இதை மட்டும் தானமாக கொடுத்தீர்கள் என்றால் அவ்ளோ தான்..!

எண்ணெய்: 

எண்ணெய்

எந்த எண்ணெயாக இருந்தாலும் சரி அதை நாம் மற்றவர்களிடம் இருந்து தானமாக வாங்க கூடாது. இதை நாம் தானமாக வாங்குவதால் சனிபகவானின் கோபம் அதிகமாகி வீட்டில் அவரின் ஆதிக்கம் அதிகரிக்கும். அதனால் பணவரவு தடைபடும். வீட்டில் கடன் தொல்லை அதிகரிக்கும். அதனால் எண்ணெயை காசு கொடுத்து வாங்க வேண்டும்.

இரும்பு பொருட்கள்: 

இரும்பு பொருட்கள்

நாம் மற்றவர்களிடம் இருந்து இரும்பு பொருட்களை தானமாக வாங்க கூடாது. இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களான கத்தி, கத்தரிக்கோல், தோசை கல், கடப்பாரை, அரிவாள் போன்ற பொருட்களை யாரிடம் இருந்தும் தானமாக வாங்க கூடாது. இரும்பு பொருட்களும் சனிபகவானின் அம்சம் என்பதால் இதை தானமாக வாங்க கூடாது. இதை தானமாக வாங்குவதால் வீட்டில் கடன் தொல்லை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்⇒ கல்யாணம் ஆனா பெண்கள் புகுந்த வீட்டிற்கு இந்த பொருட்களை எடுத்து வராதீர்கள்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement