கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய 5 விஷயங்கள் மற்றும் செய்யவே கூடாத இந்த 1 தவறு..

things to do on diwali at home in tamil

கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் மற்றும் செய்யவே கூடாத இந்த 1 தவறு..

தீபாவளி அன்று செய்ய வேண்டியவை: வணக்கம் நண்பர்களே.. வரும் திங்கட்கிழமை தீபாவளி.. இந்த சந்தோஷமான நாளில் அனைவரும் புத்தம்புதிய ஆடை அணிந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த மகிழ்ச்சியான நாளில் நமக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய 5 முக்கியமானவிஷயங்கள் மற்றும் செய்யக்கூடாத ஒரு தவறு என்ன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

தீபாவளி அன்று செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் – Things to do on Diwali at Home in Tamil:

No: 1

தீபாவளி அன்று அதிகாலை எழுத்து சாமி கும்பிட்டு தலைக்கு நல்லெணெய் வைத்து குளிப்பது என்பது அனைவரது பழக்கம். அப்படி குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் நீரில் சிறிதளவு பசும் பால் ஊற்றி அதனை நன்றாக கலந்து அதன் பிறகு அந்த நீரில் குளிக்கவும். இப்படி குளிக்கும் போதும் மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் உங்களை பிடித்த தற்திரியம், பீடை இவை அனைத்தும் நீங்கும்.

No: 2 

தீபாவளி அன்று பூஜை செய்யும் போது வாசனை நிறைந்த பொருட்களை அதிகளவு பயன்படுத்தவும். மலர்களில் மல்லி, முல்லை, சம்பங்கி, சந்தன முல்லை, ஜாதி முல்லை இது போன்று வாசனை நிறைந்த மலர்களை பூஜைக்கு பயன்படுத்துங்கள். இந்த வாசனை நிறைந்த மலர்களை பூஜைக்கு பயன்படுத்துவதினால் உங்கள் வீட்டில் மகாலட்சுமியின் கடாட்சயம் நிறைந்து இருக்கும். பூஜை செய்யும் போது அந்த பூஜையில் உங்களிடைம் உள்ள நகை, நாணயம் இது போன்றவற்றை சுத்தமாக கழுவி பூஜை வைத்து பூஜை செய்யலாம். இதன் மூலம் உங்கள் வீட்டில் பண வரவும், செல்வமும் அதிகரிக்கும்.

No: 3

தீபாவளி அன்று மிகவு கஷ்டப்படுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து அவர்களை மகிழ்விக்கலாம். இவ்வாறு கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வதினால் கண்டிப்பாக உங்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதன் மூலமாக உங்களுக்கு செல்வம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
தீபாவளிக்கு முன் தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா? அப்படி ஏற்றவில்லை என்றால் என்ன ஆகும்

No: 4

அதேபோல் தீபாவளி அன்று வாயில்லா ஜீவனான பசு மாட்டிற்கு பழங்கள், காய்கறிகள், கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி தானமாக கொடுக்கலாம். இவ்வாறு செய்வதனால் உங்களுக்கு இருந்த கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். அடுப்பில் கோவில்களில் உள்ள குளங்களில் உள்ள மீன்களுக்கு எதாவது தானியங்களை அல்லது பொரி இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கி போடலாம். இப்படி செய்வதினால் மலகட்சுமியின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். மேலும் உங்கள் முன்ஜென்ம வினைகள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் அதிகரிக்க ஆர்மபிக்கும்.

No: 5

தீபாவளி அன்று மகாலட்சுமியின் அம்சமான கல் உப்பை வாங்கி வீட்டில் வைக்கலாம். இப்படி கல் உப்பை வீட்டில் வாங்கி வந்து வைப்பதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சியம் நிலைத்திருக்கும். அல்லது மகாலட்சமிகு பிடித்த பொருட்களை வாங்கி வரலாம். இதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

செய்யக்கூடாத தவறு:

தீபாவளி அன்றும் சரி, தீபாவளிக்கு அடுத்த நாளும் சரி கண்டிப்பாக அசைவ உணவுகளை உண்பதை முற்றிலும் தவிர்க்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த 5 விஷயங்கள் தீபாவளி அன்று மறந்தும் செய்யாதீர்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்