திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு..! Thiruchendur Murugan Kovil History..!

Advertisement

திருச்செந்தூர் முருகன் தல வரலாறு..! Thiruchendur Murugan Temple History In Tamil..!

Thiruchendur Murugan Kovil / tiruchendur temple tamil history: அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் திருச்செந்தூரில் அமைந்திருக்கும் முருகனின் தல வரலாறுகளையும், அதன் சிறப்புகளையும் பற்றி இன்று நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து சிறந்து விளங்கப்படுவதாக அனைவராலும் கூறப்படுகிறது. இந்த திருச்செந்தூர் முருகன் கோவில் 9 அடுக்குகளையும், 157 அடி உயரத்தையும் அழகாக கொண்டுள்ள இந்த திருக்கோவிலின் கோபுரமானது 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. சரி வாங்க இப்போது முழுமையாக திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகனின் வரலாறு மற்றும் சிறப்புகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

newகழுகுமலை வெட்டுவான் கோயில் வரலாறு..! Kalugumalai Vettuvan Koil History In Tamil..!

திருச்செந்தூருக்கு வழங்கிய வேறு பெயர்கள்:

 திருச்செந்தூர் முருகன் தல வரலாறு
 திருச்செந்தூர் முருகன் தல வரலாறு

தமிழ்நாட்டில் நாகரிக பண்பாட்டில் சிறந்து விளங்கிய நகரம் என்று அழைக்கப்படுவது திருச்செந்தூர். திருச்செந்தூரை அலைவாய், திருசீர் அலைவாய், வெற்றிநகர், வியலாச்சேத்திரம், அலைவாய்சேறல், சிந்துபுரம் போன்ற பல பெயர்களால் சிறப்புமிக்க அழைக்கப்பெற்றது.

இந்த திருச்செந்தூர் முருகன் கோவில் மன்னார் வளைகுடாவின் கடற்கரையின் பகுதியில் அமைந்துள்ளதால் அலைவாய் என்றும், திரு எனும் அடைமொழி பெற்றுள்ளதால் திருசீர் அலைவாய் என்றும் பாடல்களில் சிறப்பாக புகழப்படுகிறது. திருச்செந்தூரில் ஓம் வடிவில் தோன்றியுள்ளது இந்த முருகன் கோவில்.

திருச்செந்தூரில் வீரவாகு தேவர் அனைத்து கடவுள்களுக்கும் காவல் தெய்வமாய் விளங்குவதால் திருச்செந்தூரை வீரவாகுபட்டினம் எனும் அனைவராலும் அழைக்கப்படுகிறது. கோவிலில் வீரவாகு தேவருக்கு பூஜைகள் நடந்து முடிந்த பின்னரே முருகனுக்கு பூஜைகள் நடத்தப்படும்.

திருச்செந்தூர் கோவில் சிறப்பு:

திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுர வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டு தான் இருக்கும். இந்த ராஜகோபுரம் எப்போது திறக்கப்படும் என்றால் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு தெய்வானை திருமண நாளில் மட்டுமே இந்த ராஜகோபுரமானது திறக்கப்படும்.

கோவிலில் அமைந்திருக்கும் சண்முகவிலாச மண்டபம் 120 அடியை கொண்ட உயரமும், 60 அடி அகலத்தையும், 124 தூண்களையும்  கொண்டுள்ளது இந்த மண்டபம்.

திருச்செந்தூர் முருகன் கோவில் தல வரலாறு:

திருச்செந்தூர் முருகன் கோவிலில் உச்சி கால பூஜைகள் நடந்து முடிந்ததும் மணி ஒலிக்கப்படும்.  இந்த ஆலயத்தின் மணியானது 100 கிலோ எடைகளை கொண்டுள்ளது. இந்த ஆலய மணி, கோவில் கோபுரத்தின் 9ஆம் அறையில் வைக்கப்பட்டு உள்ளது.

கோவிலின் எதிரில் 2 மயில்களும் 1 நந்தி பகவான் சிலைகளும் அமைக்கப்பட்டு இருக்கும். இரண்டு மயில்களில் முதல் மயிலானது இந்திரனும், இரண்டாவது சூரபத்மன், மூன்றாவது பஞ்ச லிங்கங்களின் வாகனமான நந்தி பெருமான் ஆவர்.

அருள் தரும் கடவுள்:

 

திருச்செந்தூரில் 2 கடவுள்கள் அருள்பாலித்து வருகின்றனர். முதற் கடவுளான சண்முகர், இரண்டாம் கடவுளான பாலசுப்ரமணிய சுவாமி என இரண்டு கடவுள் அருள் தந்து கொண்டிருக்கின்றனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு திசையை நோக்கியும், சண்முகர் தெற்கு திசையை நோக்கியும் அருள் தருகிறார்கள்.

அணியும் ஆடை:

திருச்செந்தூரில் இருக்கும் பாலசுப்ரமணிய சுவாமிக்கு பூஜை செய்த பின்னர் தினமும் வெண்ணிற ஆடை மட்டுமே சாற்றுகிறார்கள்.சண்முகருக்கு தினமும் பச்சை நிறம் கொண்ட ஆடைகளையே அணிவித்து வருகின்றனர்.

newதாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் வரலாறு..! Airavatesvara temple in tamil..!

நான்கு உற்சவர்கள்:

கோவிலின் மூலவருக்கு பின் பகுதியில் “பாம்பரை” என்னும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. கட்டணம் செலுத்தி சுரங்கம் உள்ளே சென்றால் முருகன் பூஜை செய்து வந்த பஞ்ச லிங்கங்களை பார்த்து ரசிக்கலாம். திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் போன்ற 4 உற்சவர்கள் உள்ளனர்.

இதில் குமரவிடங்கர் என்பவருக்கு “மாப்பிளை சுவாமி” என்ற மற்றொரு பெயரும் உண்டு.

முருகன் செய்த தாமரை மலர் பூஜை:

திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகன் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு தாமரை மலரை வைத்து சிவ பூஜை செய்து வந்தார். இன்றும் முருகனின் வலது கைகளில் தாமரை மலர் வீற்றிருக்கும்.

கங்கா பூஜை:

உச்சிக்கால பூஜை முடிந்தபிறகு தினமும் ஒரு பாத்திரத்தில் பால், உணவு எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் திருச்செந்தூர் முருகன் அமைந்திருக்கும் கடற்கரையில் இந்த பால், அன்னத்தினை கரைத்துவிடுவார்கள். இந்த பூஜைக்கு “கங்கா பூஜை” என்ற பெயரால் அழைக்கிறார்கள்.

முருகனுக்கு படைக்கும் உணவுகள்:

முருகனுக்கு சிறுபருப்பு கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கற்கண்டு, பேரிச்சை, பொறி, தோசை, சுய்யன், தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு போன்ற உணவுகள் முருகனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இதனை வைத்து தினமும் முருகனுக்கு பூஜை செய்து வருகிறார்கள். குறிப்பாக இரவு நேர பூஜைகளில் முருகனுக்கு பால், சுக்கு வெந்நீர் மட்டும் வைத்து பூஜையை செய்து வருகிறார்கள்.

மணற்குன்றுகளை உடைய திருச்செந்தூர்:

 திருச்செந்தூர் முருகன் தல வரலாறு

கோவிலின் தங்க தேரில் அறுங்கோண வடிவில் முருகன் சிலை வைக்கப்பட்டு இருக்கும். இந்த திருச்செந்தூரானது ஆதிகாலத்தில் பல மணற்குன்றுகளை உடையதாக அமைந்திருக்கின்றது. இந்த மணற்குன்றுகள் நாளடைவில் ஆலயத்தின் பிரகாரமாக மாறிவிட்டது. கோவிலின் வடக்கு பகுதியின் அருகில் மணற்குன்றுகள் மதிலாக தோன்றியிருக்கிறது.

குகை கோவில்:

திருச்செந்தூர் முருகன் கோவிலின் இடது பக்கத்தில் வள்ளி குகைக்கோயில் அமைந்துள்ளது.

நாழிக்கிணறு:

திருச்செந்தூரில் 24 அடி ஆழத்தினை கொண்ட நாழிக்கிணற்றில் பக்தர்கள் அனைவரும் நீராடிய பின்னரே அங்குள்ள கடற்கரையில் நீராடுவதை பாரம்பரிய வழக்கமாக பக்தர்கள் வைத்திருக்கின்றனர்.

சித்தர்களின் சமாதி:

பன்னிரு சித்தர்களில் 8 சித்தர்களின் சமாதியானது திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைந்துள்ளது. முருகனுடன் போரிட்ட படை வீரர்களை “ஐயனார்கள்” என்று அழைத்து வருகின்றனர்.

இவர் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை வேலால் சிதைத்த இடம் “மாபாடு” அல்லது “மணப்பாடு” எனும் பெயரில் திருச்செந்தூரின் அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.

சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்:

ஊர் மத்தியில் சிவக்கொழுந்தீஸ்வரர் எனும் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மறுபெயர் “ஆதி முருகன்” எனும் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டது.

கிறித்தவ மீனவர்கள் திருச்செந்தூரில் உள்ள முருகனை உறவு சொல்லி அழைத்து வருகின்றனர். செந்தில் ஆண்டவருக்கு ஆறுமுகன் ஐயனார் என்று மற்றொரு பெயராலும் அழைக்கிறார்கள். இந்த பெயர் வைத்து அழைப்பதால் இவர் சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

உப்பவாச தரிசனம்:

பிறப்பிலிருந்து இறப்பு வரை தவம் செய்து அடையக்கூடிய பலனை திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒரு நாள் உப்பவாசம் எடுத்து முருகனை தரிசனம் செய்வதால் அந்த பலனை அடைந்துவிடலாம் என்று சூதம முனிவர் கூறியுள்ளார்.

என்றும் இளமையுடன் தோற்றமளிக்கும் முருகன்:

 thiruchendur murugan kovil history in tamil

முருகன் மாறாத உடல் மற்றும் உள்ளத்தின் அழகினை உடையவர். முருகன் எப்போதும் இளமையுடன் காட்சி அளிப்பார். முருகன் சிவந்த நிறத்தினை உடையதால் இவரை “செந்தில்” என்றும் அழைக்கின்றனர்.

கருப்பு, சிவப்பு, நீளம், பச்சை, மஞ்சள் போன்ற ஐந்து வண்ண நிறத்தினை உடைய தனது வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு பக்தர்களை காணுவதற்கு முருகன் வருவார். முருகன் யோகம், போகம், வேகம் என மூன்றையும் பக்தர்களுக்கு அளிப்பவர் இந்த முருகன்.

newபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil   
Advertisement