இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு செல்லக்கூடாதா..? இதில் உங்கள் ராசி உள்ளதா..?

Advertisement

திருப்பதிக்கு போக கூடாத ராசிகள் | Zodiac Signs That Should Not Go To Tirupati in Tamil | திருப்பதி சென்று வந்தால் கடனாளி ஆகும் ராசிகள்

பொதுவாக பணக்கார சாமி என்றால் நியாபகத்திற்கு வருவது எழுமையான் தான். இவரை ஒரு முறை தரிசித்து வந்தால் வீட்டில் நன்மை உண்டாகும். கடன் இருக்காது என்று நம்பிக்கையில் மக்கள் அதிகமாக திருப்பதிக்கு செல்வார்கள்.

இன்னும் சிலர் ஜாதகம் பார்க்கும் போது ஜோதிடர் சொல்லிவிட்டார் என்று சிலர் திருப்பதிக்கு செல்வார்கள். போயிட்டு வந்தால் கஷ்டம் நீங்கி நன்றாக இருப்பீர்கள் என்றும் சொல்வார்கள். திருப்பதிக்கு செல்வது அவ்வளவு சுலபம் அல்ல. அதிகளவு மக்கள் திருப்பதிக்கு செல்ல முடியாமல் எப்போது அங்கு செல்வோம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழும் பணம் இருந்தால் திருப்பதி செல்ல போகிறோம் என்று ஆனால் ஆன்மீக ரீதியாக சில ராசியினர் திருப்பதிக்கு செல்லக்கூடாது. அது எந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் திருப்பதிக்கு செல்லலாமா..?

திருப்பதிக்கு போக கூடாத ராசிகள் | Which Rashi Should Not go to Tirupati:

  • வருஷத்தில் 365 நாட்களில் 350 திருவிழாக்களும் உற்சவமும் நடக்கும் கோவில்கள் திருப்பதி வெங்கடாசலபதி தவிர வேறு எந்த தெய்வத்திற்கும் நடப்பதில்லை. அதனால் தான் திருப்பதியை பூலோக வைகுண்டம் என்று புராணங்களில் சொல்லபடுகிறது.
  • எல்லா தமிழ் மாதமும் சிறப்பு மிக்கதாக இருந்தாலும் புரட்டாசிக்கு என்றும் சிறப்பு உள்ளது. அதாவது புரட்டாசி என்பது ஜோதிடத்தில் கன்னி ராசியை குறிக்கும். கன்னி ராசியின் அதிபதி புதன். புதனின் அதிதேவதை திருமால் ஸ்ரீ மஹாவிஷ்னு. சந்திரனின் நட்சத்திரம் ஆன அஸ்தம் உள்ள ராசி நில ராசி.
  • பொதுவாக சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம் , திருவோணம் ஆகிய மூன்று ராசிக்கும் ஸ்ரீ விஷ்னுவான எழுமையானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
  • கிரங்களில் பெருமாளை குறிக்கும் கிரகம் புதன், இந்த புதன் கன்னி ரரசியில் உச்சம் அடைகிறார். அதே கன்னி ராசியில் தான் சுக்கிரன் நிச்சம் அடைகிறார்.
  • புதன் விஸ்ணுவையும், சுக்கிரன் லட்சிமியை குறிக்கும். திருப்பதி சாமியின்  துணைவி லட்சுமி அவரிடம் கோவிப்புத்து கொண்டு மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் அமர்ந்துவிட்டதாக ஸ்தலபுராணம் சொல்கிறது. அதாவது திருப்பதில் லட்சுமி கிடையாது.
  • கன்னியில் புதன் உச்சமாகவும், சுக்கிரன் நிச்சமாகவும் இருப்பது இதை உறுதி செய்வதாகவே சொல்லபடுகிறது. கன்னி உச்ச புதன் அப்படி என்பதால் திருப்பதி பெருமாளுக்கு நின்ற கோலம் ஆகும்.
  • கலபுரிசனம் லக்னத்திற்கு ஆறாம் வீடு கன்னி. ஆறாம் பாவகம் என்பது கடன், வம்பு வழக்கு என்பதை குறிக்கிறது. எனவே திருப்பதியை குறிக்கும் ராசி கன்னி ராசி ஆகும்.

 thirupathi poga koodatha rasigal

  • திருவோணம் நட்சத்திரம் என்பது சந்திரனின் சாபம் தோஷம் பெற்ற நட்சத்திரம் ஆகும். பெருமாள் குபேரனிடம் கடன் வாங்கியதும் திருவோண நட்சத்திரத்தில் தான். அதனால் இன்று வரை பெருமாள் கடனாளியாகவே இருக்கிறார்.
  • திருப்பதிக்கு சென்று வந்தால் மனம் திருப்பதி அடையாதவர்கள். மனம் திருப்தி அடைவீர்கள். அதேபோல் பொருளாதார ரீதியாக நல்ல வளத்தையும் திருப்தியையும் கொடுக்கும். ஆனால் சிலருக்கு மோசமான நிலையையும், பெரும் கடன்வாங்கும் நிலையையும் கொடுக்கும்.
  • சில ராசி லக்கணகாரர் திருப்பதிக்கு போயிட்டு வந்தால் முன்பு இருந்த பொருளாதார நிலையை விட குறைவாகவே இருப்பார்கள். ஆகவே இந்த மூன்று ராசிகள் மட்டும் திருப்பதிக்கு செல்வதை தவிர்த்து கொள்ளவும்.
  •  சிம்மம், தனுசு, கும்பம் இந்த மூன்று ராசிகள் திருப்பதிக்கு செல்ல கூடாது. அதையும் மீறி சென்றால் ஒரு முறை மட்டும் செல்லவேண்டும். அடிக்கடி சென்றால் கடன் தொல்லை அதிகரிக்கும்.  

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  திருமணத்தில் இணைய கூடாத ராசிகள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement