திருவண்ணாமலை கிரிவலம் 2025 | Thiruvannamalai Girivalam 2025
Thiruvannamalai Girivalam Dates 2025 : சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது திருவண்ணாமலை கிரிவலம் வந்து வணங்குவது மிகவும் சிறப்பு. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும்.
கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாள்களுமே உகந்த தினம் என்றாலும் பௌர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் கிரிவலத்துக்கு மற்ற தினங்களை விடவும் அதிகச் சிறப்பு உண்டு என்று கூறியிருக்கிறார்கள். அதாவது ஊழ்வினையை நீக்கும் திருவண்ணா மலையானை நினைத்தாலே பாவங்கள் தீரும். 2025-ம் ஆண்டில் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல நினைப்பவர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த 2025-ம் ஆண்டு பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் பற்றி பட்டியலிட்டுள்ளோம் அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாங்க..
| Pournami Date 2025 |
திருவண்ணாமலை கிரிவலம் தூரம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவல மலை (Thiruvannamalai Girivalam Distance) சுற்றளவு 14 கிலோ மீட்டர்.
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை:
திருவண்ணாமலை கிரிவலம் ஆரம்பிப்பதற்கு முன் அண்ணாமலையார் கோயிலுக்கு அருகில் இருக்கும் பூத நாராயணரைத் தரிசித்து அவரின் அனுமதி பெற வேண்டும். பூத நாராயணர் தான் திருவண்ணாமலையின் காவல் தெய்வம் ஆக இருக்கிறார். இவரை வணங்கிய பிறகு இரட்டை பிள்ளையாரை வணங்க வேண்டும். அதன் பிறகு சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் வணங்க வேண்டும்.
அதன் பின் கோவில் ராஜ கோபுரத்தை வணங்கி மலையை வலம் வரத் தொடங்க வேண்டும். இப்படித்தான் கிரிவலம் தொடங்க வேண்டும் என்பது ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள்:
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்வது நமக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. அவற்றை பற்றி காண்போம்.
- உடல் மற்றும் மனதை தூய்மைப்படுத்துகிறது.
- எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களை தருகிறது.
- ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.
- உங்களின் ஆசைகளை நிறைவேற்ற கூடிய எண்ணம் தோன்றும்.
- உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனைகள் இருந்தால் அவை முடிவுக்கு வரும். எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
கிரிவலம் செல்ல உகந்த நாள்:
திருவண்ணாமலை கிரிவலம் ஆனது ஒவ்வொரு மாதம் பெளணர்மி அன்று நடைபெறுகிறது. ஆனால் தமிழ் மாதமான கார்த்திகை (நவம்பர் & டிசம்பர்) மாதத்தில் வர கூடிய பெளணர்மி சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இந்த மாதத்தில் தான் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.
Thiruvannamalai Girivalam Lingam:
- இந்திர லிங்கம்
- அக்கினி லிங்கம்
- எம லிங்கம்
- நிருதி லிங்கம்
- வருண லிங்கம்
- வாயு லிங்கம்
- குபேர லிங்கம்
- ஈசன்ய லிங்கம்
Tiruvannamalai Girivalam Dates and Timings 2025:
| திருவண்ணாமலை கிரிவலம் தேதி நேரம் | ||
| நாள் | ஆரம்ப நேரம் | முடிவடையும் நேரம் |
| நவம்பர் 04 | இரவு 10.36 | நவம்பர் 05 மாலை 06.48 |
| ஜனவரி 13 | காலை 05.03 | ஜனவரி 14 காலை 03.56 |
| பிப்ரவரி 11 | மாலை 06.55 | பிப்ரவரி 12 இரவு 07.22 |
| மார்ச் 13 | காலை 10.35 | மார்ச் 14 பகல் 12.23 |
| ஏப்ரல் 12 | காலை 03.21 | ஏப்ரல் 13 காலை 05.51 |
| மே 11 | இரவு 08.01 | மே 12 இரவு 10.25 |
| ஜூன் 10 | காலை 11.35 | ஜூன் 11 பகல் 01.13 |
| ஜூலை 10 | வியாழன் | ஜூலை 11 அதிகாலை 02.06 |
| ஆகஸ்ட் 08 | பகல் 02.12 | ஆகஸ்ட் 09 பகல் 01.24 |
| செப்டம்பர் 07 | அதிகாலை 01.41 | இரவு 11.38 |
| அக்டோபர் 06 | பகல் 12.23 | அக்டோபர் 07 காலை 09.16 |
| நவம்பர் 04 | இரவு 10.36 | நவம்பர் 05 மாலை 06.48 |
| டிசம்பர் 04 | காலை 08.37 | டிசம்பர் 05 அதிகாலை 04.43 |
திருவண்ணாமலை கிரிவலம் லிங்கம்:-

| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













